Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 2 July 2011

கேரளத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி கொள்ளைக்கு தாராள அனுமதி எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது உம்மன்சாண்டி அரசு அடக்குமுறை சட்டமன்றத்தில் அமளி

0 comments
 திருவனந்தபுரம், ஜூன் 30-

கேரளத்தில் தனியார் மருத்துவக்கல் லூரி நிர்வாகங்களின் கொள்ளைக்கு தாராள அனுமதி வழங்கியுள்ள உம்மன் சாண்டி அரசை எதிர்த்து போராடும் மாண வர்கள் மீது ஏவப்பட்டுள்ள காவல் துறை யின் கொடூர அடக்குமுறையை கண்டித்து கேரள சட்டமன்றத்தில் வியாழனன்று பெரும் கொந்தளிப்பு நிலவியது.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடனேயே, கல்வித்துறையை வியாபாரமாக்கி பெரும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு கொண்டாட்ட மாகிவிட்டது. முந்தைய இடதுஜனநாயக முன்னணி அரசு ஏற்படுத்தி வைத்திருந்த ஒழுங்குமுறைகளையெல்லாம் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உம்மன்சாண்டி அரசு, கேரளத்தில் பணம் இருப்போருக்கு மட்டுமே கல்வி என்ற நிலைமையை ஏற் படுத்த முயற்சித்து வருகிறது. குறிப்பாக தனியார் சுயநிதி கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகங்கள் பெற்றோர்களிடமும், மாண வர்களிடமும் கல்விக் கட்டணங்கள் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சத வீத இடங்கள் கட்டாயம் அரசு ஒதுக்கீட் டின் அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும் என்பது இடதுஜனநாயக முன் னணி அரசின் ஆட்சியில் உத்தரவாதப் படுத்தப்பட்டது. ஆனால், அரசு ஒதுக்கீடு என்பதை ரத்து செய்து, அனைத்து இடங் களையும் கல்லூரி நிர்வாகங்களே தங்கள் இஷ்டப்படி நிரப்பிக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் தலைமையிலான அரசு தற் போது அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் மாநிலம் முழுவதும் பெரும் போராட் டத்தை அறிவித்தது. ஏற்கெனவே கடந்த வெள்ளியன்று கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத் தில் காவல்துறையை ஏவி அரசு ஒடுக்கு முறை தாண்டவமாடியது.

இந்நிலையில், ஜூன் 29 புதனன்று கேரளா முழுவதும் இந்திய மாணவர் சங் கத்தின் தலைமையில் அகில இந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன் றம் உள்பட பல்வேறு மாணவர் அமைப் புகள் இணைந்து மிகப்பெரும் போராட்டத் தில் ஈடுபட்டன. இப்போராட்டத்தின் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் தலைமைச்செய லகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய மாணவர் சங்க மாநில இணைச் செயலாள ரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர் .ராஜேஷ் படுகாயமடைந்து ரத்தவெள்ளத் தில் கீழே விழுந்தார். அவர் மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். சரண்யா என்ற மாணவி காவல்துறையின ரால் கடுமையாக தாக்கப்பட்டு திருவனந் தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தாக்குதலில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

தலைமைச்செயலகம் முன்பு அமைதி யான முறையில் ஊர்வலமாக வந்து குழு மிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்த முன்னறிவிப்பும்செய்யாமல் காவல் துறையினர் சூழ்ந்து நின்று தாக்கத்துவங் கினர். கண்ணீர்புகைகுண்டுகளையும் வீசினர். 22 கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன என்று மாணவர்கள் தெரிவித் தனர். திருவனந்தபுரம் மாநகர காவல்துறை கமிஷனர் மனோஜ் ஆபிரகாம், நேரடியாக மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்.

இந்திய மாணவர் சங்க மாநிலத்தலை வர் கே.வி.சுமேஷ், துணைத்தலைவர் ஏ.ஏ. ரஹீம், கேரளப் பல்கலைக்கழக மாணவ பேரவைத்தலைவர் லெனின், திருவனந்த புரம் மாவட்டத்தலைவர் பாலமுரளி, அகில இந்திய மாணவர் பெருமன்ற மாநிலத்தலை வர் பிரதீப்குமார், ஏ.சஜன், உதயகுமார், ரம்யா, லேகா ஆகியோர் காவல்துறையின் இத் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

மீண்டும் தாக்குதல்

இதனிடையே, காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தாக்குதலை கண்டித்து வியாழனன்று மாநிலம் முழுவதும் இந்திய மாணவர்சங்கத்தின் தலைமையில் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. இந்தப்போராட்டத்தின் மீதும் காவல் துறையினர் தாக்குதல் தொடுத்தனர். குறிப் பாக கண்ணூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் மீது காவல்துறையினர் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவர்சங்க கண்ணூர் மாவட்டச் செயலாளர் வி.கே. சனோஜ் உட்பட 17 மாணவர்கள் படுகாய மடைந்து மருத்துவமனைகளில் அனும திக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் ஆவேசம்

மாணவர்கள் மீதான தாக்குதல், வியா ழனன்று கேரள சட்டமன்றத்தில் எதிரொ லித்தது. காவல்துறையினரின் கண்மூடித் தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கடும் கண்ட னம் தெரிவித்தது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து இப்பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறினார். எனினும் அதற்கு அனுமதி மறுக் கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் ஆவேசத்துடன் முழக்கமெழுப்பினர்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com