Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 13 July 2011

150 மருத்துவ மாணவர்களின் கதி என்ன?

0 comments
மதுரை: எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் நடத்தும் சென்னை மருத்துவக் கல்லூரியில் முறைகேடாக சேர்க்கப் பட்ட 150 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க் கையை முறைப்படுத்த முடியாது என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம் இருங்களூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கிவருகிறது. உரிய தகுதிவாய்ந்த பல்கலைக் கழக உறுப்பினர் அங்கீகாரம் பெறாத நிலையில், இந்த மருத்துவக் கல்லூரியில் 2009 - 10ம் ஆண் டிற்கு 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த மாணவர் சேர்க்கை முறைகேடானது, முறைப்படுத்த முடியாதது என உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித் துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை தள் ளுபடி செய்த நீதிபதி பி.ராஜேந்திரன் தனது தீர்ப்பில், மாணவர்கள் மீது இரக் கம் காட்டுவதைத் தவிர நீதிமன்றம் அதிக அளவில் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றார். 150 மாணவர்கள் ஏற்கெனவே 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளனர். கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக் கால உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படிப்பைத் தொடர முடிந்தது டன், தேர்வும் எழுத முடிந்தது.

இந்த நடைமுறை அனுமதிக்கப்பட் டால் நாளை ஒவ்வொருவரும் தகுதி வாய்ந்த பல்கலைக் கழக உறுப்பினர் அங் கீகாரம் இல்லாமல் மாணவர் சேர்க்கை யைத்தொடருவார்கள். இந்த உத்தரவு 2009 - 10ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு உரி யது. அடுத்து வந்த கல்வி ஆண்டுகளுக்கு உரியது அல்ல என நீதிபதி கூறினார்.

திருச்சி இருங்களூர் சென்னை மருத் துவக் கல்லூரி தமிழ்நாடு எம்ஜிஆர் பல் கலைக்கழக அங்கீகாரத்துடன் செயல்பட நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. இந் திய மருத்துவக் கவுன்சிலும் ஆய்வு செய்து, இந்தக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்தது. தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் என்பதற்கு பதிலாக, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி என்கிற தவறுதலான பரிந்துரையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு ஜூலை 14ம்தேதி மத்திய சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச் சகம் அளித்த அனுமதி கடிதத்திலும் கல்லூரியின் பல்கலைக் கழக இணைப்பு விபரம் தவறுதலாக குறிப்பிடப்பட் டிருந்தது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com