Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 21 June 2011

சமச்சீர் கல்வியை அமுல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் SFI போராட்டம் :

0 comments
தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுக! மாணவர்கள் போர்க்கோலம்
  


சென்னை, ஜூன் 21 -

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு உயர்த்தியுள்ள கட்டண உயர்வை உடன டியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்ட ணமே அதிகமாக உள்ளது. இந்த நிலை யில், கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட் டணத்தை உயர்த்தக்கோரி தனியார் பள் ளிகள் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு, பல பள்ளிகளுக்கு 100 விழுக் காட்டிற்கும் மேல் கட்டணத்தை உயர்த்தி யுள்ளது. இந்த கட்டண உயர்வை உடன டியாக ரத்து செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகளின் நியாயமற்ற கட் டணக் கொள்ளையால் லட்சக்கணக் கான பெற்றோர்கள் சுரண்டப்படுகின்ற னர். பள்ளி நிர்வாகங்கள் சட்டத்தையும், அரசின் விதிமுறைகளையும் மீறி கட்ட ணம் வசூலிப்பதை அரசும், அரசு நிர்வா கமும் வேடிக்கை பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவில், அரசு தரப்பில் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இரண்டு தனியார் பள்ளி முதலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் சென்ற கல்வி வியாபாரிகளை குழுவில் இணைத்துள்ளது எந்த வகை யிலும் ஏற்க முடியாது. ஆகவே, இந்த கல்வி வியாபாரிகளை ஆய்வுக் குழுவில் இருந்து நீக்க வேண்டும்.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தை தேவையான மாற்றங்களோடு நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மாணவர்க ளின் நலன் கருதி முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் . அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள் ளிகள், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி என்பது அரசின் உத்தரவாக இருந் தாலும் கட்டாய நன்கொடை வசூலிக்கப் படுகிறது. கட்டாய நன்கொடை தடைச் சட்டத்தின்படி அப்பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி களில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கடந்தாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, ஆசிரியர் காலிப் பணியிடங் களையும் நிரப்ப வேண்டும் என வலி யுறுத்தி சென்னை பள்ளிக் கல்வி இயக்கு நரகத்தை (டிபிஐ) இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பேரணியாக இயக்குநரகத்திற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் கள், இயக்குநரை சந்தித்து மனுக் கொடுக்க முயற்சித்தனர். அதற்கு போலீசார் அனு மதி மறுத்து விரட்டியடிக்க முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியது. அப்போது போலீசார் லத்தியால் மாணவர்களை தாக்கினர். இரும்பு தடுப்புகளை மாணவர்கள் மீது தள்ளினர். இத்தாக்குதலில் ஆறுமுகம், சதீஷ் ஆகியோருக்கு ரத்த காயம் ஏற்பட் டது. சுமார் 20பேருக்கு உள்காயம் ஏற்பட் டது. இதன்பின்னர் இயக்குநரக வாயிலை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத் தை தொடர்ந்தனர். அதனைத்தொடர்ந்து அனைவரையும் போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜோ. ராஜ்மோகன், வடசென்னை மாவட்ட செய லாளர் எம்.என்.குமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் ரெ.ஸ்டாலின், செயலா ளர் சே.ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப் பினர் ஜான்சி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, செயலாளர் ராஜன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முனிச் செல்வம், செயலாளர் பகத்சிங்தாஸ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணியளவில் விடுதலைசெய்யப்பட்டனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மாநிலம் முழுவதும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமரியில் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல் லூரி மாணவர்கள் 2000க்கும் மேற்பட் டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட் டம் நடத்தினர். இந்து கல்லூரி, ஸ்காட் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி, ஐயப்பன் கல்லூரி, குளித்துறை தேவி மேரி கல்லூரி, மகளிர் கிருத்துவ கல் லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் சரபோஜி கல்லூரி மாண வர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் வகுப்பு களை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ. பழனி, மாவட்ட செயலாளர். வீ. கரிகாலன், மாநிலக்குழு உறுப்பினர் அருளரசன், பாலசுந்தர் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர். தஞ்சை மகளிர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாண விகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட செயலாளர் சிங்கார வேலர் தலைமை வகித்தார். நூற்றுக் கணக்கானோர் பங்கெடுத்தனர். மயிலாடு துறை தியாகி நாராயணசாமி பள்ளி மாணவர்கள் 100 பேர் வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பி முட் லூர் அரசு கலைக் கல்லூரியின் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் தலைமை யில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பாலாாஜி, ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் கே.என்.சி கல்லூரி முன்பு ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் கனிமொழி தலை மை வகித்தார். நாமக்கல், வேலூர் உள் ளிட்டு மாநிலம் முழுவதும் போராட்டங் கள் நடைபெற்றன.
 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com