Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 15 June 2011

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : SFI - DYFI

0 comments
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்ட ணம் வசூலித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் வலியுறுத்தியுள்ளன.

இந்திய மாணவர் சங்க மாநிலச் செய லாளர் ஜோ. ராஜ்மோகன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். வேல் முருகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை பின்வறுமாறு:
பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கல்விக் கட்டணம் 6400 பள்ளிகளுக்கு தனித்தனியாக தீர்மானிக்கப்பட்டு நீதிபதி. ரவிராஜபாண்டியன் குழுவால் திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது. கல்விக்கட் டணம் வெளியிடப்பட்டால் உடனே தெரிந்து கொள்ளலாம் என நினைத்த பெற்றோர்களுக்கு இணைய தளத்தில் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கெனவே இக்கல்வியாண்டுக்கான கட் டணத்தை ஏப்ரல் முதலே தனியார் பள்ளிகள் வசூலை துவங்கி, தற்போது பெற் றோர்களை மிக வற்புறுத்தி பறிக்கும் நிலைக்கு மாறியுள் ளது. எனவே, கல்விக்கட் டண விபரத்தை பெற்றோர் கள் உடனே தெரிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

தமிழக அரசின் தனியார் பள்ளி கல்விக்கட்டண ஒழுங்குபடுத்தும் சட்டம் மூலம் தீர்மானித்த கல்விக் கட்டணம் என்பதால், இது அரசு தீர்மானித்த கல்விக்கட்டணம் தான். எனவே, இக்கட்டண விபரங்கள் பள்ளிக ளில் பின்பற்றப்படுகிறதா அல்லது மீறப் படுகிறதா என்பதை அரசு தான் கவனிக்க வேண்டும். பெற்றோர் புகார் என்பது மட் டுமே அரசின் தலையீட்டை ஏற்படுத்தும் என்றால், சட்டம் பயனற்றதாகிவிடும். எனவே, சட்டத்தில் உள்ளபடி மாவட்டந்தோறும் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் ஆய்வு செய்வதற்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். ஏனெனில் கல்வி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் கல்விக் கட்டணத்தில் தலையிட தமக்கு அதிகாரம் இல்லை என்றே நினைக்கின்றனர். புகார் தரும் பெற்றோர்களிடம் எனக்கு அதிகா ரம் இல்லை என்பதே அனைத்து கல்வி அதிகாரிகளின் வாதமாக உள்ளது.

மேலும், அனைத்து பள்ளிகளும் கல்விக்கட்டணங்களை காசோலை / பண வோலை மூலமாக மட்டுமே பள்ளியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் பேரில் வாங்க வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பிக்க வேண் டும். அரசு கட்டணத்தை மீறி வசூலிக்கும் பள்ளிகள் மீது யார், யாரிடம் புகார் தர வேண்டும், புகார்களை எத் தனை நாட்களுக்குள் விசா ரிக்கவேண்டும் என்பதை அரசு உடனடியாக அறி விக்க வேண்டும். மீறும் பள் ளிகள் மீது என்ன நடவடிக் கை எனவும் அரசு தெளிவுப் படுத்த வேண்டுமென கேட் டுக்கொள்கிறோம். இவ் வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com