Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 11 June 2011

சமச்சீர் கல்வி உயர்நீதிமன்றம் தீர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

1 comments
சமச்சீர் கல்வி நடப்பு கல்வியாண்டில் ரத்து செய் யப்படும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட திருத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்தது. மேலும் சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே நடை முறைப்படுத்த வேண்டு மென நீதிபதிகள் உத்தர விட்டுள்ளதை இந்திய மாண வர் சங்கமும், வாலிபர் சங் கமும் வரவேற்றுள்ளன.

கடந்த ஆட்சியில் நீண்ட போராட்டத்திற்கு பின் கொண்டுவரப்பட்ட சமச் சீர் கல்வியை ரத்து செய்யும் வகையில் புதிய அரசின் நடவடிக்கையை தமிழக மாணவர்கள், பெற்றோர் கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டம், பாடநூல்களில் ஒருசில குறைபாடுகள் இருப்பதை சொல்லி சமச்சீர் கல்வி தர மற்றது என்று இந்தாண்டு 1 முதல் 10ம் வகுப்பு வரை மிக சிறந்த முறையில் உரு வாக்கப்பட்ட 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப் பட்ட பாடநூல்களை மாணவர்கள் படிக்கத் துவங்கிவிட்ட நிலையில் நடப்பு கல்வியாண்டில் சமச் சீர் கல்வி பாடத்திட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாக தமி ழக அரசு அறிவித்ததோடு, சட்டமன்றத்தில் இதற்கான சட்டதிருத்தத்தையும் நிறை வேற்றியுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத் திட்ட பாடநூலில் குறை பாடுகள் இருந்தால் களைந்து விட்டு நடப்பு கல்வியாண்டி லேயே நடைமுறைப்படுத் திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கங் கள் உட்பட போராடி வந் தன. இதுகுறித்து தொடரப் பட்ட பொதுநல வழக்கின் மீதான தீர்ப்பு தமிழக மாண வர்கள், பெற்றோர்கள், கல்வி யாளர்கள் உள்ளக் கிடங்கை தட்டியெழுப்பும் தீர்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே தமிழக அரசு உயர் நீதிமன்ற தீர்ப்பை நடை முறைப்படுத்தும் வகையில் நடப்பு கல்வியாண்டிலேயே பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் நடைமுறைக்கு கொண்டு வருவதோடு, கல்வி யாளர் ச.முத்துக்குமரன் குழுவின், பெரும்பான்மை யான இதர பரிந்துரைகளை யும் படிப்படியாக முழுமை யான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்திடும் வகையில் அரசு பயணிக்க வேண்டும் .

One Response so far.

  1. Unknown says:

    not sucess forsamacheer kalvi so ur struggle very fast moving ok.
    by
    Beniz
    Nagercoil
    DYFI Join Secratary

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com