Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 24 June 2011

பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்று :

0 comments
அரசுக் கல்லூரிகளாக மாற வேண்டும் :
-சிவசு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக அரசு தனது சாதனைகளாக துறைவாரியாக பட்டியலிட்டிருந்தது. அதில் உயர்கல்வித் துறையின் சாதனைகளில் ஒன்றாக திமுக அரசு பதவியேற்றபின் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்கியிருப்பதாக விளம்பரப்படுத்தி இருந் தது. ஆனால், திமுகவின் முந்தைய ஆட்சியில் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுரண்டை மற்றும் குளித்தலை பகுதிகளில் உள்ள இரண்டு கல்லூரிகள்தான்.

மேட்டூர், பென்னாகரம், பெரம்பலூர், ஒரத்த நாடு, லால்குடி, அறந்தாங்கி, திருவல்லிநல் லூர், வந்தவாசி, வால்பாறை மற்றும் தேனி ஆகிய பத்து இடங்களில் துவங்கப்பட்ட கல்லூரிகள் எல்லாம் அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளாக துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது திருச்சுழி, நாகலாபுரம், நெமிலி, கள்ளக்குறிச்சி, திருத் துறைப்பூண்டி, அரூர் ஆகிய 6 இடங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரிகளாக துவங்குவதற் கான வாய்ப்புகள்தான் உள்ளன.

அரசு கல்லூரிக்கும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கும் வேறுபாடு என்ன? பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஏன் துவங்கப்பட்டன? பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன?

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தையும் அந் தந்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களு டன் இணைத்து விடுவதற்கான பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி சட்டத்தினை, 2002ம் ஆண்டு கொண்டு வந்தது அதிமுக அரசு. இச்சட்டத்தினால் தங்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசு ஊழியர் அந்தஸ்து இவை யனைத்தும் பாதிக்கப்படுமென ஆசிரியர் அமைப்புகளும், கல்விக்கட்டணம் உயர்த்தப் படுவதற்கும், இன சுழற்சி முறையான சேர்க்கை பாதிக்கப்படுமென கூறி மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்ப தில் அரசு உறுதியாயிருந்தாலும், ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் எந்த விதத்தி லும் பாதிப்பு இருக்காது என அரசின் சார்பில் உறுதி கொடுக்கப்பட்டது.

அதன்பின் நடைபெற்ற ஆண்டிபட்டி, சாத்தான்குளம் ஆகிய இடைத்தேர்தல்க ளின் பிரச்சாரத்தின்போது இப்பகுதிகளில் அரசு கல்லூரிகள் துவங்கப்படுமென வாக் குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சட்டம் நடைமுறையில் இருந்ததால் ஆண்டிபட்டி யில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலும், சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் கட்டுப்பாட்டிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் துவக்கப்பட்டன.

பின்னர் அதே ஆட்சியில் 2003-04ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட் பட்ட கூடலூரிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி துவங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக்கழக உறுப்புக் கல் லூரிகளின் சட்டத்தை திரும்பப்பெற்றது. ஆனால் இதனைச் செய்த திமுக அரசும் 10 கல்லூரிகளை அரசு கல்லூரிகள் என அறி வித்து, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக ளாக துவங்கியதுதான் விந்தையான முரண்.

2001-2006ல் அதிமுக அரசு காலத்தில் துவங்கிய 3 கல்லூரிகள், திமுக அரசின் 2006-11 காலத்தில் துவக்கிய 10 கல்லூரிகள், திமுக அரசு அறிவித்து அதிமுக அரசு துவக்க இருக்கும் 6 கல்லூரிகள் என மொத்தம் 19 கல் லூரிகள் பல்கலைக்கழகங்களின் கட்டுப் பாட்டில் இருக்கும்.

தமிழ்நாட்டில் உறுப்புக் கல்லூரிகளைக் கொண்ட 6 பல்கலைக்கழகங்களுக்கும், கல் லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் விவரங்கள் கேட்கப்பட்டு, அவைகள் கொடுத்த குறைந்தபட்ச தகவல்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட விவரங்கள் இங்கு தொகுக்கப்பட் டுள்ளன.

கல்விக்கட்டணம் :
அரசு கல்லூரிகளில் இளம்நிலை மற்றும் முதுநிலை வகுப்புகளில் பயிலும் எந்த ஒரு மாணவரும் கல்விக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகம் கொடுத்த தகவலின் அடிப்படையில், முதுநிலை கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.5000 மற்றும் இளம் நிலை கல்வி படிக்கும் மாணவர் ஒரு வர் ரூ.3000 லிருந்து ரூ.5000 வரை பாடப் பிரிவுகளைப் பொறுத்து கல்விக்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. பெரியார் பல் கலைக்கழகத்திற்குட்பட்ட உறுப்புக் கல்லூரி களில் கல்விக்கட்டணம் வசூலிப்பதில்லை என தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் இப்பல்கலைக்கழகம் கல்விக்கட்டணத்தின் பெரும்பகுதியை சிறப்புக்கட்டணத்தில் சேர்த்து வாங்கிவிடுகின்றது.

சுழற்சி முறை :

தமிழகத்தில் மொத்தம் 69 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 58 கல்லூரிகளில் சுழற்சி முறை (ளுாகைவ ளலளவநஅ) நடைமுறையில் உள்ளது. இந்த சுழற்சிமுறை பின்பற்றப்பட்டதிலிருந்து, அதாவது இரண்டாவது சுழற்சி துவங்கப்பட்ட பின் ஏற்கெனவே பயிலும் எண்ணிக்கையில் உள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆண் டிற்கு 30,000 மாணவர்கள் கூடுதலாக படிப் பதற்கு வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை பொறுத் தவரையில் பாரதியார் பல்கலைக்கழக உறுப் புக் கல்லூரிகள் தவிர்த்து மற்ற எந்த உறுப்புக் கல்லூரியிலும் சுழற்சி முறை பின்பற்றப் படுவது இல்லை. உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாறும்பட்சத்தில், மேலும் சுமார் 10,000 ஏழை மாணவர்கள் பயில்வதற் கான வாய்ப்புகள் அரசு கல்லூரிகளில் ஏற்படும்.

இலவச பஸ் பாஸ் :

அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட இரண்டு கல்லூரிகள் தவிர்த்து வேறு எந்த உறுப்புக் கல்லூரியிலும் இலவச பஸ் பாஸ் வசதி இல்லை.

இக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாறும்பட்சத்தில் சுமார் 20,000 மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் என்ற அடிப்ப டையில் இலவச பஸ் பாஸ் பெற வாய்ப்பு உள்ளது.

நிதி ஒதுக்கீடு :

அரசு கல்லூரிகளின் அடிப்படை கட்ட மைப்பு, அதாவது கட்டிடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் போன்ற வற்றை உருவாக்குவதற்கும், பழுது பார்ப்பதற் கும், பராமரிப்பதற்கும் தமிழக அரசின் நிதி யிலிருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஒரு சில தவிர்த்து அரசின் நிதி உதவி மிகக்குறை வாகவே உள்ளது. மேலும் ஒரு அரசு கல்லூரி 2எப், 12பி அந்தஸ்து பெற்றுவிட்டால் நேரடி யாக பல்கலைக்கழக நிதி நல்கை குழுவிட மிருந்து யுஜிசி கல்லூரியின் வளர்ச்சி திட்டங் களுக்கு நிதி உதவியை பெற முடியும் பெறு கின்றனர். பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களைப் பொறுத்தவரையில், அந்தந்த பல்க லைக்கழகங்கள் யுஜிசி அமைப்பிடமிருந்து நிதி பெற முடியுமே தவிர, உறுப்புக்கல்லூரி களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை.

ஒரு பக்கம் அரசிடமிருந்து நிதி குறை வாக பெறப்படுகிறது. மறுபுறம் பல்கலைக் கழக நிதி நல்கை குழுவிடமிருந்து நிதி உதவி பெற முடியாத நிலையில் உறுப்புக்கல் லூரிகள் தங்களின் வளர்ச்சிக்கு பல்கலைக் கழக நிதி ஒதுக்கீட்டை மட்டுமே பெருமளவு சார்ந்திருப்பதால், கல்லூரிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

ஆசிரியர்கள் , அலுவலர்கள் ஊதியம் :

பாரதிதாசன் உறுப்புக் கல்லூரிகளில் சில பணியிடங்கள் தவிர்த்து ஏனைய பணியிடங்க ளும், மற்ற பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களின் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பணியிடங்களும் தொகுப்பூதியத்தின் அடிப் படையிலேயே நிரப்பப்படுகின்றன. சில கல் லூரிகளில் தினக்கூலி அடிப்படையிலும் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களில் கவுரவ ஆசிரியருக்கான மாதச்சம் பளம் ரூ.4000 மட்டுமே. தொகுப்பூதிய ஆசிரி யர்களுக்கு ரூ.8000 வழங்கப்படுகிறது. பாரதி தாசன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியரின் தகுதிக்கேற்ப ரூ.8000லிருந்து ரூ.12,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் நிரந்தரப் பணியில் பணியாற்றும் ஆசிரியருக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் என்பது சுமார் ரூ.37,000 ஆகும். மேற்கூறிய அனைத்து வகையான ஆசிரியர் களும் ஒரே மாதிரியான பணியில் ஈடுபட்டா லும் அவர்களுக்கிடையேயான ஊதிய முரண் பாடு என்பது உழைப்புச் சுரண்டலின் கோர முகத்தை காட்டுகிறது.

இலவச மடிக் கணினி (லேப் டாப்) :


சுருக்கமாகச் சொன்னால் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரிகள் என்பது பல் கலைக்கழகங்கள் நடத்தும் சுய நிதிக் கல் லூரிகளே. இக்கல்லூரிகளை அரசு கல்லூரி களாக மாற்ற வேண்டியது ஏழை, எளிய மக்களின் உயர்கல்வியில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களின் கடமையாகும்.

அரசு கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட சலுகைகளான கல்விக்கட்டண ரத்து, இல வச பஸ் பாஸ் வசதி போன்றவை உறுப்புக் கல்லூரிகளுக்கு கிடைக்கப்பெறாமல் இருப் பது போல், அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, செப்டம்பர் 15ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெற இருக்கும் இலவச மடிக் கணினியும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கப்போவ தில்லை.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com