Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 10 June 2011

நடப்பு கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வி

0 comments

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பினை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை இந்திய மாணவர் சங்கமும் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக வரவேற்கின்றோம் .

இந்த தீர்ப்பின் மூலம் கல்வி வியபாரமாவது தடை படும் .
ஏழை , பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்கும் .
மேலும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் உள்ள குறைகளை நீக்கி , செழுமைபடுத்தி வருகின்ற கல்வி ஆண்டுகளில் நடைமுறை படுத்துமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசை இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு கேட்டுக் கொள்கிறது .

உயர்நீதி மன்ற தீர்ப்பு வெளியானவுடன் இந்திய மாணவர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக புதுவை ராஜா திரையரங்கம் அருகில்
09 -06 -2011 மாலை ஆறு மணிக்கு SFI சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளப்பட்டது .

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com