Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 18 June 2011

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வுசெய்ய தனியார் பள்ளி முதலாளிகளா?

0 comments
சமச்சீர் கல்வி பாடத் திட்டங்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அமைத் துள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில் தனி யார் பள்ளி முதலாளிகள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி 2010- 2011 ஆம் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ஆம் வகுப் பில் பொதுப்பாடத்திட்டம் மூலம் பாடநூல்கள் நடை முறைப்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 2 முதல் 5 மற்றும் 7முதல் 10 வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டம் பாடநூல் கள் உருவாக்கப்பட்டு மாண வர்கள் படிக்க துவங்கிய நிலையில், தமிழக அரசு பாடத்திட்டம் தரம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை சீர்குலைக்கும் நடவடிக்கை களில் இறங்கியது. அதன்படி நடப்பு கல்வி யாண்டில் சமச்சீர் கல்விக் கான பொதுப்பாடத் திட் டத்தை ரத்து செய்யும் வகை யில் அரசால் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட் டது. இச்சட்டத் திருத்தத் திற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டம், பாட நூல்கள் நடப்பு கல்வியாண் டிலேயே நடைமுறைப் படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த விருப் பமில்லாத அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிறப்பு வழக்காக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல் வியை நடப்பு கல்வி யாண்டே நடைமுறைப்படுத்த வேண் டும். மேலும் மற்ற வகுப்பு களுக்கான பாடத்திட்டம், பாடநூல்களின் தரம் குறித்து 9 பேர் கொண்ட வல்லுனர் குழு மூன்று வாரத்தில் ஆய்வுகள் செய்து உயர்நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவில் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், தேசிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சிலின் பிரதிநிதிகள் இருவர், தமிழக அரசு சார் பில் இருவர், கவ்வியாளர் கள் இருவர், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் அடங்கிய குழுவாக இருக்க வேண்டுமென உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதில் கல்வியாளர்கள் என்ற போர்வையில் டி.ஏ.வி பள்ளிகளின் நிறுவனர் ஜெயதேவ், பத்ம சேஷாத் திரி பள்ளிகளின் உரிமையா ளர் ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகிய தனியார் பள்ளி முத லாளிகளை அரசு நுழைத் துள்ளது. மேற்கண்ட இரு வரும் சென்னையில் பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். சமச் சீர் கல்விக்கான பாடத் திட்டங்களை ஆய்வு செய் யும் இந்தக் குழுவில் இவர் களை எந்த அடிப்படை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி நிறுவனங் களை நடத்தும் இவர்கள், கல்வியாளர்கள் என ஏற் றுக்கொள்ள முடியாது. இதுவரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட எந்த குழு விலும் கல்வியாளர்கள் என்ற வகையில் தனியார் பள்ளி முதலாளிகள் அங்கீ கரிக்கப்பட்டதில்லை.

தனியார்பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்து வரு வதை அனைவரும் அறி வோம். இக்குழு, மாணவர் கள்- பெற்றோர்கள் நலன் கருதி நடுநிலையோடு ஆய்வு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் இல்லை. தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை குழிதோண்டிப் புதைத்திடவே அரசு முடி வெடுத்துள்ளதும் இதிலி ருந்து தெரிய வருகிறது. எனவே, இத்தகைய நடவ டிக்கைக்கு இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com