Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 16 June 2011

கல்வி நமது அடிப்படை உரிமை : பாதுகாப்போம்

0 comments
கல்வி பெறும் உரிமை... ஒரு தொடரும் கனவு
-கிருஷ்ணக் குமார்
கல்வி பெறும் உரிமைச் சட்டம் இயற்றப் பட்டு ஓராண்டு காலம் முடிந்துவிட்டது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றபடி கல்வியறிவு பெறுவதற்காகக் காத் திருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குழந் தைகளும் ஓராண்டைக் கடந்துள்ளனர். குழந் தைகள் சத்துணவின்றி புறக்கணிக்கப்படு வது போல் இச்சட்டமும் புறக்கணிக்கப்பட் டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் நாள் முதல் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கொடுப்பது என்ற கனவு நிறைவேறாத தாகவே உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கால வரையரையுடன் வந்துள்ள இச்சட்டம், அதன் தொடக்க நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில்தான் ஓராண்டுக்குப் பின்ன ரும் உள்ளது. சட்டத்தின் ஒரு முக்கியமான பிரிவினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட் டத்தின் பிற பகுதிகளை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு தடையேதும் இல்லை. இருப்பினும் மாநில அரசுகளின் கவனம் இதன்பால் முழுவதுமாகத் திரும்பவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து பேசும் போது, இந்தியக் கூட்டாட்சியில் கல்வி, மாநிலங்களின் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, ஆரம்பக்கல்வி குறித்து தலையிடு வதில் மிகச்சிறிய பங்கே உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு, மாநில அரசு களை இச்சட்டத்தினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் பொறுப்பை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இம் முயற்சியில் மிகச் சிறிய வெற்றியே பெற்றுள் ளது. ஏன்?

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக் கிய அம்சம், தரமான கல்வி பெறுவதை அனைத்துக் குழந்தைகளின் உரிமையாகப் பார்க்கிறது. சட்டத்தின் ஐந்தாம் பிரிவு, தரமான ஆரம்பக்கல்வியை அடைவதற்கான அடிப்ப டைத் தேவைகளைப் பட்டியலிடுகிறது. இதில் கற்றலுக்கு உகந்த ஆசிரியர்-மாணவர் விகி தாச்சாரம், பாடத்திட்ட சீர்திருத்தம், மதிப் பிட்டு முறையில் மாற்றம் ஆகியன அடங்கும். இவைகளின் வெற்றி ஆசிரியர்களின் முயற்சி யில்தான் உள்ளது. இதுவே இன்றைய மிகப் பெரிய சவாலாகும்.

குழந்தைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதே இன்றைய உடனடித் தேவை யாகும். தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்விக் குழு(சூஊகூநு) நிறுவப்பட்ட போது, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை உரிய முறையில் ஆய்வு நடத்தி உரிமங்களை வழங்கிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இக்குழு அதன் வேலையைச் சரியாகச் செய்யாததால் பிரச் சனை முற்றிப் போய் உள்ளது. ஆயிரக்கணக் கில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எவ்விதத் தரமும் நேர்மையுமின்றி வெறும் லாப நோக்குடன் செயல்பட்டு வருகின்றன.

கல்வி பெறும் உரிமைச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும் கல்வித் திட்டம், ஆசிரியர் பயிற்சி, மாணவர் மதிப்பீடு இவற்றை நிர்ணயிக்கவும் மேம்படுத்தவும் ஒரு கல்வி ஆணையத்தை உருவாக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங் கள் இத்தகு ஆணையத்தை உருவாக்கவில் லை என்பது கசப்பான உண்மையாகும். பெரும்பான்மை மாநிலங்கள் அவைகளின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனங்களையே (ளுஊநுசுகூ) இதற்கான ஏற்பா டாக அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அவைகளின் நடுநிலைப் பள்ளிக் கல்வி நிறு வனத்திடமே (க்ஷடியசன டிக ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) இப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கென்று தனி ஆணையம் ஏதும் இம்மாநிலங்களில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் அவை களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு பணி களுடன் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தையும் கண்காணிக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவி லேயே கேரளாவில் மட்டுமே மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. கார ணம் இந்நிறுவனத்திற்குத் தேவையான அந் தஸ்தையும் மரியாதையையும் இடது ஜனநா யக முன்னணி அரசு அளித்துள்ளது. கேரளா வில் புதியதாகப் பதவி ஏற்றிருக்கும் அரசு இத னை சீர்குலைத்துவிடாது என்று நம்புவோம். பிற மாநிலங்களும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரத்தையும் அந்தஸ்தையும் வழங்கி அவைகளைப் பலப்படுத்திட வேண்டும். கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை அமல் படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் , ஊக்கத்தையும் இங்கிருந்து பெறும் வகையில் இந்நிறுவனங்களை வளர்த்திட வேண்டும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் ஆசிரியர்களுக்கும், அதிகாரி களுக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள் ளன. குழந்தைகளை ஏதேனும் ஒரு கட்டத் தில் பெயிலாக்கி வெளியே அனுப்பும் பழக்கத் தில் ஊறிப் போனதிலிருந்து விடுபடுவதற்கு ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்கிறது. அதே போல் குழந்தையை மையப்படுத்திய கற்பித் தல் முறையையும், தேர்வுகளைத் தவிர்த்து விட்டு மாணவர்களைத் தொடர் மதிப்பீடு செய்யும் முறையையும் முற்றிலும் வித்தியாச மாக உணருகிறார்கள். குழந்தைகளை அடிப் பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஆசிரியர் களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. குழந் தைகளை அச்சுறுத்தியே படிக்க வைக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு எத்தகு கல்வி கொடுப்பது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். கற்றல், கற்பித்தல் எதுவும் நடக்காமல் இவைகள் குழந்தைகளை பராமரிப்பு மையங்களாகவே செயல்படுகின்றன. இம்மையங்களில் பணி யாற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படாமையால் எதையும் கற்றுக் கொடுக்காமல் பகல் முழுவதும் குழந்தை களைப் பராமரிக்கும் ஆயாக்களாகவே செயல் படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு வரு வார்கள், இலவச மதிய உணவு உண்பார்கள், சென்றுவிடுவார்கள் என்பதே வழக்கமாகியுள் ளது. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பது குறித்த அக்கறை யாரிடமும் இல் லை. இதனாலேயே ஏழைப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அவர்கள் வாழும் இடத்துக்கு அருகில் அல்லது சிறிது தூரத் தில் இருக்கும் தனியார் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகள் குழந் தைகளை அடித்து உதைத்து பாடங்களைத் திணித்து தேர்வுகளுக்குத் தயார் செய்கின் றன. தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல் லாமையால் ஏராளமான பாலர் பள்ளிகளில் குழந் தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனர்.

கல்வி பெறும் உரிமைச் சட்டம் வெற்றி யடைந்திட வருகின்ற நான்காண்டு காலத் திற்குள் பத்து லட்சம் ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த பத்து லட்சம் ஆசிரியர் களுக்கு யார் பயிற்சி கொடுப்பது? குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள்? தேசிய அளவிலான இந்தச் சவாலைச் சமாளிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பல்கலைக்கழகங்களில் இதற்கான சலனங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற் றத்தை அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட் டுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கூட ஆசிரியர் பயிற்சியை புறந்தள்ளியுள்ளன. எனவே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாக அஞ்சல் வழிக் கல்வி ஒன்றே தென்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்கிடுவதற்கான ஏற்பாடு கள், செலவுகள் குறித்த விவாதங்கள் எந்த மட்டத்திலும் இன்னும் நடைபெறவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவை எதிர்த்து மேட்டுக்குடி மக்களுக் கான பள்ளிகளின் நிர்வாகிகள் உச்ச நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப் பள்ளி கள் மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சத வீதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக் கிட வேண்டும். தங்கள் பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்குச் சமமாக எப்படி ஏழைக்குழந்தைகளை உட்கார வைக்க முடியும்? இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது? 25 சதவீத இட ஒதுக்கீட்டினால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு கட்டப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. அரசு குறிப்பிடும் இத்தொகை போது மானதாக இருக்காது என்றும் இப்பள்ளி நிர் வாகிகள் கருதுகின்றனர்.

இவ்வழக்கில் அரசு வெற்றி பெற்றால் மேட்டுக்குடிப் பள்ளிகளின் மேட்டுமைத் தனத்தை சிறிது அசைக்க முடியும். இதைத் தாண்டி இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இவ்விரு வர்க்கப் பிரிவினரையும் சேர்த்து வைத்துப் பாடம் நடத்திட தனி பயிற்சி அளித்திட வேண்டும். கொல்கத்தா நகரில் உள்ள “தி லொரோட்டோ” பள்ளி நிர்வாகம் இதில் பெரும் வெற்றிபெற்று உள்ளது. இப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி சிரில், தன்னுடைய பள்ளியில் வர்க்க பேதங்கள் இல்லாமல் குழந்தைகள் ஒன்றாகப் பழகி பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்று கூறுகின்றார். வர்க்க பேதங்கள் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி யின் அனுபவத்தை மற்ற பணக்கார பள்ளிகள் கற்றுக் கொள்ள வேண்டும். பணக்கார குழந் தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் போது இரு பிரிவினரும் பயன் அடைவர் என்பதே உண்மையாகும். இவ்வுண்மையைப் பணக்கார பெற்றோரும் பள்ளி நிர்வாகிகளும் உணர்ந்திட வேண்டும்.

கட்டுரையாளர்,

முன்னாள் டைரக்டர் என்சிஇஆர்டி

தமிழில் : பேரா.பெ.விஜயகுமார்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com