Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 10 June 2011

இந்திய வண்ணங்களின் நாயகன் எம்.எப்.ஹூசேன்

0 comments
உலகப்புகழ் பெற்ற இந்திய ஓவியர் மக்புல் ஃபதா ஹூசேன் புதனன்று கால மாகி விட்டார். லண்டனில் ராயல் பிராம்ப் டன் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 95.

1915இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த அவர், 1937இல் மும்பையில் சினிமா பேனர்கள் எழுதும் பணியில் சேர்ந்து தன் கலைவாழ் வைத் துவக்கியவர். 1947 இல் அவர் ‘முற்போக்குக் கலைஞர்கள் குழு’ வோடு இணைந்து பணியாற்றத் துவங்கியதற்குப் பிறகே அவர் கலை உலகில் ஓர் மகத்தான ஓவியராக அடை யாளம் காணப்பட்டார்.

உலக அளவில் பிகாசோவோடு சமமாக வைத்துப் புகழப்பட்டவர் இந்திய ஓவியக் கலைஞர் ‘ஹூசேன் மட்டும்தான். 1966 இல் பத்மஸ்ரீ விருதும், 1973இல் பத்மபூஷன் விருதும், 1989இல் பத்மவிபூஷன் விருதும் பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்திய ஓவிய மரபிலிருந்து நிர்வாண வடிவில் சித்திரம் தீட்டுவதை ஒரு பாணி யாகக் கொண்டிருந்தார்.அதற்காக உலகெங் கும் பாராட்டுப்பெற்றார்.ஆனால் இந்துத்துவ சக்திகள் அவர் வரைந்த சரஸ்வதி கோட் டோவியத்துக்காக அவரையும் அவரது படைப்புகளையும் தாக்கியது. தொடர்ந்து அவருடைய படைப்புகள் தாக்கி அழிக்கப் பட்டன. கொலை மிரட்டல் இருந்து கொண்டே இருந்தது. சர்வதேச மனிதரான அவரை இஸ்லாமியர் என்கிற ஒற்றை அடை யாளத்துக்குள் அடைக்க முயன்றார்கள். ஆகவே அவர் இந்தியாவில் தங்கியிருந்து தன் படைப்புச் செயல்பாட்டைத் தொடர முடியாத மனநெருக்கடிக்கு உள்ளாக்கப்பட் டார்.14 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைத் தானே நாடு கடத்திக்கொண்ட அவர் மீண்டும் தன் தாயகம் திரும்பவே இல்லை..

இந்தியாவின் அடை யாளமாக உலகம் அங்கீக ரித்த அவர், தன் இறுதிக் காலத்தில் நாடற்றவராக வாழ நேர்ந்தது. கத்தார் நாடு மனமுவந்து அவருக்குத் தன் நாட்டுப் பிரஜை என்ற அங்கீகாரத்தை அளித்தது. “நான் என் தாய் நாடான இந் தியாவை நேசிக்கிறேன். ஆனால் என் தாய்க்கு நான் வேண்டாதவனாகிவிட்டேன். எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் இல்லை ” என்று மலையாளத் தினசரி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். பின்னர் இந்தியாவில் நடைபெற்ற சில சர்வதேச ஓவிய நிகழ்வுகளுக்கு அவரை வர வழைக்க கலைஞர்கள் பெருமுயற்சி எடுத்த போதும் இந்திய அரசு உதவத்தயாராக இல்லை. அவரை மீண்டும் நாட்டுக்குக் அழைத்துவர காங்கிரஸ் அரசு எந்த முயற்சி யும் எடுக்கவில்லை என்று தமுஎகச மாநி லத்தலைவர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெளியிட் டுள்ள அச்செய்தியில் கூறியுள்ளனர்.

அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த அஞ் சலி செலுத்தும் இந்த வேளையில் அவரு டைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து அரச மரியாதையுடன் அடக்கம் செய்து, அவர் வாழ்ந்த காலத்தில் செய்யத்தவறி யதை இப்போதாவது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வற்புறுத்தியுள்ளனர். 

ஓவியர் ஹூசேனின் மறைவுக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் கள் சங்கம் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com