Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 29 June 2011

பிரிட்டனிலும் கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் :

0 comments
போராட்டத்தை உடையுங்கள்  பெற்றோர்களைத் தூண்டுகிறார் பிரிட்டன் அதிகாரி
லண்டன், ஜூன் 28 -

அரசின் கல்வி மற்றும் கட்டணக் கொள்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங் களை உடையுங்கள் என்று பெற்றோர்களைத் தூண்டி விட பிரிட்டன் கல்வித் துறை செயலாளர் முயற்சித் துள்ளார்.

போராட்டம் தீவிரம டைந்துள்ளதால், அதில் ஈடுபட்டுள்ளவர்களை அதி தீவிரவாதிகள் என்று கல் வித்துறை செயலாளர் மைக் கேல் கோவ் முத்திரை குத்தி யுள்ளார். மேலும், தங்கள் அந்தஸ்து பற்றிக் கவலைப் படாமல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடு படுகிறார்கள். ஜூன் 30 ஆம் தேதிக்குள் இவர்களது ஆர்ப்பாட்டங்களுக்கு முற் றுப்புள்ளி வைக்கும் வகை யில் போராட்டத்தைத் தகர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு வேண்டு கோள் வைத்துள்ளார்.

ஜூன் 30 ஆம் தேதிதான் பள்ளிக்கூடங்கள் திறக்கப் பட உள்ளன. விடுமுறைக் காலத்தில் போராடி வரும் ஆசிரியர்களை அழைத்துப் பேசாமல், பள்ளிக்கூடங் கள் திறக்க முடியவில்லை என்றால் அந்தப்பழியை அவர்கள் மேல் போடும் முயற்சியில் அரசு இறங்கி யிருக்கிறது. பிரிட்டனில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் விடு முறைக்குப் பிறகு திறக்கும் நாளான ஜூன் 30 அன்று அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங் கள், உறுதியாகப் போரா டப்போவதாக அறிவித்தி ருக்கின்றன.

செயலாளரின் விமர்ச னத்துக்குப் பதிலளித்த ஆசிரியர் சங்கத் தலைவர் களில் ஒருவரான மேரி பவுஸ்டட், தேவையில்லா மல் பெற்றோர்களை முன் னிறுத்தும் வேலையில் அரசு இறங்கியிருக்கிறது. எவ்வளவு அலட்சியமாகப் பிரச்சனையைப் பார்க்கி றார்கள் என்பதற்கு மைக் கேல் கோவின் நடவடிக்கை எடுத்துக்காட்டாகும். கடைசி நடவடிக்கையா கவே எங்கள் சங்க உறுப்பி னர்கள் வேலை நிறுத்த நட வடிக்கையைப் பார்க்கிறார் கள். 127 ஆண்டுகளில் முதன் முறையாக வேலைநிறுத்தம் நடக்கப்போகிறது. நம்பிக் கையோடு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அரசின் சிக்கன நடவ டிக்கைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒரு கோடி பிரிட்டன் மக்கள் பங்கேற் கிறார்கள். ஜூன் 30 ஆம் தேதி ஆசிரியர்கள் நடத்த விருக்கும் போராட்டம் அனைத்துப் பகுதி மக்களுக் கும் உத்வேகம் அளிக்கும் என்று பிரிட்டனின் முன் னணி தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

Read more...

சுயநிதி கல்வித்துறை பிரச்சனை: மாணவர்கள் மீது காவல்துறை தடியடி-36 மாணவர்கள் காயம்

0 comments

ஆலப்புழா, ஜூன் 28-

சுயநிதி கல்விக் கொள்கை பிரச்சனை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) நடத்திய எதிர்ப் புப் பேரணி போராட்டத் தில் காவல்துறையினர் நடத் திய தடியடியில் 31 பேர் காய மடைந்தனர்.

கேரள மாநிலம் ஆலப் புழாவில் சுயநிதிக் கல்வித் துறையில் நிலவும், கட்ட ணப் பிரச்சனைக்கு முடிவு கோரி இந்திய மாணவர் சங் கத்தினர் மாவட்ட ஆட் சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி எதிர்ப்புப் பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணியின் போது, காவல் துறையினர் மாணவர்கள் மீது திடீர் தடியடி தாக்கு தலை நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர்.

எஸ்எப்ஐ மாவட்ட இணைச் செயலாளர் சி.பி. வர்கீஸ், பகுதிச் செயலாளர் முகமது ஆசிக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

எதிர்ப்புப் பேரணியில் 25 மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் செய்த னர். 15 பேர் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.

சுயநிதிக் கல்விக் கட் டண கொள்ளையை கண் டித்து திங்கட்கிழமை மதி யம் 12 மணிக்கு பேரணியை துவக்கிய மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது காவல் துறையினர் ஆத்திரம் அடைந்து தடியடியில் ஈடு பட்டனர். கோட்டயத்தி லும் எஸ்எப்ஐ மாணவர் கள் மேற்கொண்ட பேரணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 எஸ்எப்ஐ உறுப்பினர்கள் படுகாயமடைந்தனர். எஸ்எப்ஐ மாவட்டச் செய லாளர் சதீஷ் வர்கி தலை மையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் காவல்துறை தாக்குதல் நடத்தியது.

கொச்சி

கொச்சியில் கன்னய னூர் தாலுகா அலுவலகம் நோக்கி எஸ்எப்ஐ மாண வர்கள் மாநில சுயநிதி தொழில் கல்லூரிகள் சேர்க்கை கொள்கையை கண்டித்து பேரணி மேற் கொண்டனர். இதில் தண் ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளை காவல் துறையினர் வீசினர். தடி யடியும் நடத்தினர்.

கேரள மாநிலத்தில் இந் திய மாணவர் சங்கத்தினர் சுயநிதிக் கல்வி கொள்கை யை எதிர்த்து நடத்தும் பேர ணிகளை ஒடுக்கும்விதமாக காவல் துறையினர் கடுமை யான தடியடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
Read more...

மருத்துவ மாணவர்கள் போராட்டம் :

0 comments
ஷில்லாங்: மேகாலயாவில் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாண வர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயிலும் மருத் துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன் சிலின் அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை என்ற தகவல் வெளியானதை யடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயன்சஸ் நிறுவனத்தில் பயி லும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்று விளக்கம் கோரினர். மேலும் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

தங்களது கவலையை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மாணவர்களுள் ஒருவர் தெரிவித்தார். அவர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத் துவிட்டார்.

விரைவில் இந்திய மருத்துவக் கவுன்சி லின் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த நிறுவனம் மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

Read more...
Tuesday, 28 June 2011

கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் போராட்டம் :

0 comments
  • புதுச்சேரியில் உள்ள அரசு  பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ,அடிப்படைவசதிகளை  பூர்த்தி செய்யவும் 
  •   தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் 
  • சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமுல்படுத்த வலியுறுத்தியும் ,சமச்சீர் கல்வி ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் கல்வி நிறுவன வியாபாரிகளை நீக்க கோரியும் 
  • தனியார் மருத்துவம் , பொறியியல் கல்லூரிகளில் 50 % அரசு இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தவும் 
  • 50 ம் ஆண்டு பொன்விழா காணும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கல்லூரியை புதுப்பொலிவுடன் புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் 

இன்று ஒரு நாள் இந்திய மாணவர் சங்கம் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்  கல்லூரி மாணவரும் இந்திய மானவர் சங்க து .தலைவர் ரஞ்சித் மற்றும்  மைய உறுப்பினர் பார்த்தசாரதி தலைமையிலும் இப்போராட்டம் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிபிடத்தக்கது. இப்போராட்டத்தை  இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த் வாழ்த்தி பேசினார் .


Read more...
Sunday, 26 June 2011

முற்றும் துறந்த சாமியார்கள் அறையைத் திறந்தால்... மகா கேவலம்...!

0 comments
                 இன்றைக்கு   நாட்டில் சாமியார்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது அதீதமானது.  ஏராளமான மக்கள் - குறிப்பாக படித்த மக்களேக் கூட சாமியார்கள்  செய்யும் சித்து விளையாட்டுகளில் மயங்கி அவர்களது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர். இப்படியாக மாயஜால வித்தைகளை காட்டி அப்பாவி மக்களின் பணங்களையும், சொத்துக்களையும் அபகரிக்கும் சாமியார்களை தான் நாம் இப்போது நம் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் பல லட்சம் கோடி சொத்துக்களை இந்த சாமியார்கள் சேர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு இந்தியாவில் மூலதனமே இல்லாமல் பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கும் தொழில்களில் ஒன்று இந்த சாமியார் தொழில் என்பது தான் உண்மை. ஆட்சியாளர்களின் துணை இருப்பதால்  இப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு கணக்கு வழக்கு கிடையாது. வருமானவரி கட்டத் தேவை இல்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் என மேல்தட்டு குடிமக்கள்  முதல் சாதாரண குடிமக்கள் வரை  இவரது பக்தகோடிகளாக இருக்கிறார்கள். அதனால் அரசு இவர்களது வருமானத்தைப் பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ  கண்டுகொள்வதே இல்லை. பெரிய, பெரிய சாமியார்களின் (அதிகாரப்பூர்வ) சொத்து விபரங்களைப்  பார்த்தால் மலைப்பூட்டும் அளவிற்கு சொத்துக்கள் மலையாய் குவிந்த்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல முற்போக்குச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாதிகளும் சாமியார்களின் சித்து விளையாட்டுகளை பற்றியும், ஏமாற்று வேலைகளை பற்றியும் எவ்வளவோ எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால்  இப்போது தான் இந்த சாமியார்களெல்லாம்  ஒரு மோசடி சாமியார்கள் என்பதை  மக்கள்  ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.          
 
புட்டபர்த்தி சாய்பாபா : 

             அண்மையில் மரணமடைந்த புட்டபர்த்தி சாய் பாபா பயன்படுத்தி வந்த அவரது சொந்த அறையை திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி தான் காத்திருந்தது.  அந்த சாமியாரின்  ஆசிரமத்தில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் ( சுமார் 12 கோடி ரூபாய் ), கட்டிக்  கட்டியாகத் தங்கம் ( சுமார் 22 கோடி ரூபாய் ), வெள்ளி வகைகள் ( சுமார் 1.64 கோடி ரூபாய் ) மற்றும் வைரக்குவியல்கள் - வகை வகையான  தங்கச் சிலைகள்  என்று  அரை முழுதும் தாராளமாகக் கொட்டிக் கிடந்தன என்று சொல்கிறார்கள்.. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

 வேலூர் ஜூனியர் சாமியார் நாராயணி : 

                வேலூரில் வெகு அண்மைக்காலத்தில் திடிரென சாமியாராக தோன்றிய சிறு பையன்,  நாராயணி என்ற பெயரில் கண்ணுக்கு நேரிலேயே மூக்கில் கையை வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி. வேலூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கொஞ்ச கொஞ்சமாக நிலங்களை ஆக்கிரமித்து, அந்த பகுதிக்கு ஸ்ரீபுரம் என்று பெயர் வைத்து, மிக சமீபத்தில் அங்கே ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான  தங்கத்தை பயன்படுத்தி மிகப்பெரிய "பொற்கோயிலை" கட்டி, பார்ப்போர் வியக்கும் அளவிற்கு  பிரமிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார். அந்த பகுதியே இன்று சுற்றுலா ஸ்தலமாக மாறிவிட்டது. ஒரு பொற்கோயிலை கட்டுமளவிற்கு ஒரு சிறுவனுக்கு கோடிக்கணக்கான பணம் எப்படி கிடைத்தது என்பது தான் அந்த கோயிலை பார்போருக்கு எழும் கேள்வியாகும். சாதாரண மக்களுக்கே அப்படிப்பட்ட கேள்வி எழும் போது, ஏன் ஆட்சியாளர்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட கேள்வியோ - சந்தேகமோ எழவில்லை என்பது தான் நமது கேள்வியாகும்.  



மாதா அமிர்தானந்தமயி:

           இவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது  அமிர்தானந்தமயி டிரஸ்டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது பல  அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம் குவிகிறது. மற்றொரு புறம், அவர் நடத்தும்  கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம்.  தனியார் கல்விச் சந்தையில் வசூலிக்கும்  கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.


ஆஷாராம் பாபு:

           இந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர்களில்  இந்த ஆஷாராம் பாபு என்ற சாமியாரும் ஒருவர். . ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன.   2009 - ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இவரது  ஆசிரமங்கள் உள்ளன.


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் :

                 151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துபவர். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.  தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களூருவில் வாழும் கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.


பாபா ராம்தேவ் :

           ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றிருக்கிறார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.

           இப்படியாக நம் நாட்டில்  நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சாமியார்கள் எண்ணிக்கையும் அவர்கள் சேர்க்கும் சொத்துக்களும் உயர்ந்துகொண்டே தான் போகிறது. ஆனால் ஆட்சியாளர்களோ சாமியார்கள் சேர்க்கும் சொத்துகளுக்கு ஒரு கட்டுப்பாடோ, விதிமுறைகளையோ விதிப்பதில்லை. ஆட்சியாளர்கள் கவனம் தங்கள் பக்கம் திரும்பாத அளவிற்கு ஆட்சியாளர்களை சாமியார்கள் ''கவனித்து'' விடுகிறார்கள்.
           மேலே சொன்ன அத்தனை சாமியார்களும் இலவச மருத்துவமனைகளை நடத்தி அப்பாவி மக்களின் கண்களையும் கட்டிவிடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

Read more...
Saturday, 25 June 2011

டீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து SFI-DYFI மண்ணை வாரி விடும் போராட்டம் :

0 comments

®.

 இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
சங்கம் சார்பில்  ஜூன் 25  டீசல் - கேஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறக்  கோரி கேஸ் சிலின்டர்ரை வைத்து மண்ணை வாரி விடும் போராட்டம் ஜீவா காலனி அருகே நடைபெற்றது. இப்போராட்டத்தில் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழர்கரை நகர செயலாளர் லெனின் துரை ஜனநாயகவாலிபர் சங்க தலைவர் சந்துரு ,பொருளாளர் பிரபுராஜ் ,இடை  கமிட்டிசெயலாளர் பாஸ்கர் ,மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் .து.தலைவர் ரஞ்சித் , நிர்வாகிகள் ரோகன் ,ராம்கோபால் , மாதர் சங்கம் சார்பாக சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...
Friday, 24 June 2011

கல்விக்கு புதுவை அரசு செய்யவேண்டியது என்ன?

0 comments

கல்விக்கு புதுவை அரசு செய்யவேண்டியது என்ன?


மாநில நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்


புதுவையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்விவரை அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதை ஆராய கல்வியாளர்கள், வல்லுநர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அதன் பரிந்துரைகளை போர்கால அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகளில் முடிப்பது 

 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் 15 சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதநிதிகளின் குழந்தைகளும், அனைத்து வகை அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

 புதுச்சேரிக்கான தனியானதொரு கல்விச்சட்டம் இயற்றப்பட வேண்டும். அதில் அடிப்படை வசதிகள், நிதி ஆதாரங்கள், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் தாய்மொழி கல்வி போன்றவைகள் சட்டமாக இருக்க வேண்டும்.

 புதுச்சேரி விடுதலைப் போராட்டம், புதுச்சேரி வரலாறு மற்றும் இயற்கை அமைப்பு பற்றிய திறனை மாணவர்கள் பெற பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

 புதுச்சேரியில் படிப்பறிவில்லாதவர்கள் யாரும் இல்லாத நிலையை உருவாக்க ஒரு முழு வீச்சான மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை நடத்த வேண்டும்.

இனி புதியதாக தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது. 

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு தனியான அனைத்து விவரங்களும் அடங்கிய இணையதளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும்; உயரதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கானிப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். 

தரமான கட்டடங்களைக் கொண்ட பள்ளியாகவும், பாதுகாக்கப்பட்ட முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், மாணவ, மாணவியர்களுக்கு தனித் தனியே பொதுக் கழிவறை வசதியும் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதும், இதை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் தனி நிதி ஒதுக்கி அதை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைப்பது. 

ஆய்வகங்கள் இல்லாமல் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பரிவுகளுக்கு ஆய்வகங்கள் கட்டுவது, போதுமான உபகரணங்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

ஆசிரியர்களை கல்விப்பணி தவிர்த்த வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது குறிப்பாக கோவில் நிர்வாகம், அமைச்சர்களுக்கு உதவியாளர் போன்ற கல்வித்துறைக்கு சம்பந்தம் இல்லாத பணிகளுக்கு அனுப்பவதை தடைசெய்ய வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களை கல்வி அல்லாத வேலைகளுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் புதுவையில் ஆண்டுக்கு 29 நாள் பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஓப்பந்த அடிப்படையில் ஆசிரியர், கல்வி பணி அல்லாத ஊழியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் வகுப்புகள் நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.

ஆசிரியர் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம மற்றும் சக ஆசிரியர்கள் சேர்ந்து ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடுவது.

கல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் (பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் சேர்ப்பதற்கு எந்த விதமான தேர்வு முறையையும் பின்பற்றக் கூடாது. & தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டுமென சட்டம் இயற்றுவதோடு கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்பட்டது என்று அறிவிக்க வேண்டும்.

பள்ளி நூலகங்கள் முறையாக பராமரிக்க தேவையான நூலகர்கள், நூல்கள், தேவையான இடம் மேலும் மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் காலமுறைப்படியே செய்யவேண்டும். தொற்று வியாதிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பிரத்ஏக வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

போதுமான அவசர உதவி மருந்துகள், கருவிகள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு போதுமான அளவு நாப்க்கின்கள் வைத்திருக்க வேண்டும். 

தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெரும் மாணவர்களின் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். 

பொறியல், மருத்துவம் படிப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல   கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ, பொறியல் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டை உறுதியாக பெற்றுத் தர வேண்டும்.

Read more...

அதிகம் படித்தால் எப்போதுமே இளமை!

0 comments


அதிகமாக படித்துக் கொண்டே இருப்பவர்கள் எப்போதும் இளமையாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கூடுதலான கல்வித் தேர்வுகளை எழுதுபவர்கள் மற்றும் எப்போதும் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பவர்கள் இளமையாகவே இருக்கின்றனர். ஒரே வயதுடையவர்களிடையே அதிகம் படித்துக் கொண்டே இருப்பவர்கள் மற்றும் படிக்காமல் இருப்பவர்களிடையே லண்டன் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் கல்விச் சாதனைக்காக தொடர்ந்து படிக்கும் நபர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதால் இளமையாகவே இருக்கிறார்கள்.
காலம் செல்ல செல்ல இவர்களின் சமூக பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வில் உயிரி வயோதிக தன்மையை குரோமோசோம் கடிகாரத்தை வைத்து நிர்ணயம் செய்துள்ளனர்.

ஆக எப்போதும் படிப்பதில் ஒரு பயன் இருக்கிறது என்றால் அது தவிர்த்து முதுமையையும் விரட்டுகிறது என்கிற ஆய்வு முடிவு புத்தகப்பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
Read more...

பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்று :

0 comments
அரசுக் கல்லூரிகளாக மாற வேண்டும் :
-சிவசு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக அரசு தனது சாதனைகளாக துறைவாரியாக பட்டியலிட்டிருந்தது. அதில் உயர்கல்வித் துறையின் சாதனைகளில் ஒன்றாக திமுக அரசு பதவியேற்றபின் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்கியிருப்பதாக விளம்பரப்படுத்தி இருந் தது. ஆனால், திமுகவின் முந்தைய ஆட்சியில் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுரண்டை மற்றும் குளித்தலை பகுதிகளில் உள்ள இரண்டு கல்லூரிகள்தான்.

மேட்டூர், பென்னாகரம், பெரம்பலூர், ஒரத்த நாடு, லால்குடி, அறந்தாங்கி, திருவல்லிநல் லூர், வந்தவாசி, வால்பாறை மற்றும் தேனி ஆகிய பத்து இடங்களில் துவங்கப்பட்ட கல்லூரிகள் எல்லாம் அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளாக துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது திருச்சுழி, நாகலாபுரம், நெமிலி, கள்ளக்குறிச்சி, திருத் துறைப்பூண்டி, அரூர் ஆகிய 6 இடங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரிகளாக துவங்குவதற் கான வாய்ப்புகள்தான் உள்ளன.

அரசு கல்லூரிக்கும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கும் வேறுபாடு என்ன? பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஏன் துவங்கப்பட்டன? பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன?

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தையும் அந் தந்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களு டன் இணைத்து விடுவதற்கான பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி சட்டத்தினை, 2002ம் ஆண்டு கொண்டு வந்தது அதிமுக அரசு. இச்சட்டத்தினால் தங்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசு ஊழியர் அந்தஸ்து இவை யனைத்தும் பாதிக்கப்படுமென ஆசிரியர் அமைப்புகளும், கல்விக்கட்டணம் உயர்த்தப் படுவதற்கும், இன சுழற்சி முறையான சேர்க்கை பாதிக்கப்படுமென கூறி மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்ப தில் அரசு உறுதியாயிருந்தாலும், ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் எந்த விதத்தி லும் பாதிப்பு இருக்காது என அரசின் சார்பில் உறுதி கொடுக்கப்பட்டது.

அதன்பின் நடைபெற்ற ஆண்டிபட்டி, சாத்தான்குளம் ஆகிய இடைத்தேர்தல்க ளின் பிரச்சாரத்தின்போது இப்பகுதிகளில் அரசு கல்லூரிகள் துவங்கப்படுமென வாக் குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சட்டம் நடைமுறையில் இருந்ததால் ஆண்டிபட்டி யில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலும், சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் கட்டுப்பாட்டிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் துவக்கப்பட்டன.

பின்னர் அதே ஆட்சியில் 2003-04ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட் பட்ட கூடலூரிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி துவங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக்கழக உறுப்புக் கல் லூரிகளின் சட்டத்தை திரும்பப்பெற்றது. ஆனால் இதனைச் செய்த திமுக அரசும் 10 கல்லூரிகளை அரசு கல்லூரிகள் என அறி வித்து, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக ளாக துவங்கியதுதான் விந்தையான முரண்.

2001-2006ல் அதிமுக அரசு காலத்தில் துவங்கிய 3 கல்லூரிகள், திமுக அரசின் 2006-11 காலத்தில் துவக்கிய 10 கல்லூரிகள், திமுக அரசு அறிவித்து அதிமுக அரசு துவக்க இருக்கும் 6 கல்லூரிகள் என மொத்தம் 19 கல் லூரிகள் பல்கலைக்கழகங்களின் கட்டுப் பாட்டில் இருக்கும்.

தமிழ்நாட்டில் உறுப்புக் கல்லூரிகளைக் கொண்ட 6 பல்கலைக்கழகங்களுக்கும், கல் லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் விவரங்கள் கேட்கப்பட்டு, அவைகள் கொடுத்த குறைந்தபட்ச தகவல்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட விவரங்கள் இங்கு தொகுக்கப்பட் டுள்ளன.

கல்விக்கட்டணம் :
அரசு கல்லூரிகளில் இளம்நிலை மற்றும் முதுநிலை வகுப்புகளில் பயிலும் எந்த ஒரு மாணவரும் கல்விக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகம் கொடுத்த தகவலின் அடிப்படையில், முதுநிலை கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.5000 மற்றும் இளம் நிலை கல்வி படிக்கும் மாணவர் ஒரு வர் ரூ.3000 லிருந்து ரூ.5000 வரை பாடப் பிரிவுகளைப் பொறுத்து கல்விக்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. பெரியார் பல் கலைக்கழகத்திற்குட்பட்ட உறுப்புக் கல்லூரி களில் கல்விக்கட்டணம் வசூலிப்பதில்லை என தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் இப்பல்கலைக்கழகம் கல்விக்கட்டணத்தின் பெரும்பகுதியை சிறப்புக்கட்டணத்தில் சேர்த்து வாங்கிவிடுகின்றது.

சுழற்சி முறை :

தமிழகத்தில் மொத்தம் 69 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 58 கல்லூரிகளில் சுழற்சி முறை (ளுாகைவ ளலளவநஅ) நடைமுறையில் உள்ளது. இந்த சுழற்சிமுறை பின்பற்றப்பட்டதிலிருந்து, அதாவது இரண்டாவது சுழற்சி துவங்கப்பட்ட பின் ஏற்கெனவே பயிலும் எண்ணிக்கையில் உள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆண் டிற்கு 30,000 மாணவர்கள் கூடுதலாக படிப் பதற்கு வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை பொறுத் தவரையில் பாரதியார் பல்கலைக்கழக உறுப் புக் கல்லூரிகள் தவிர்த்து மற்ற எந்த உறுப்புக் கல்லூரியிலும் சுழற்சி முறை பின்பற்றப் படுவது இல்லை. உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாறும்பட்சத்தில், மேலும் சுமார் 10,000 ஏழை மாணவர்கள் பயில்வதற் கான வாய்ப்புகள் அரசு கல்லூரிகளில் ஏற்படும்.

இலவச பஸ் பாஸ் :

அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட இரண்டு கல்லூரிகள் தவிர்த்து வேறு எந்த உறுப்புக் கல்லூரியிலும் இலவச பஸ் பாஸ் வசதி இல்லை.

இக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாறும்பட்சத்தில் சுமார் 20,000 மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் என்ற அடிப்ப டையில் இலவச பஸ் பாஸ் பெற வாய்ப்பு உள்ளது.

நிதி ஒதுக்கீடு :

அரசு கல்லூரிகளின் அடிப்படை கட்ட மைப்பு, அதாவது கட்டிடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் போன்ற வற்றை உருவாக்குவதற்கும், பழுது பார்ப்பதற் கும், பராமரிப்பதற்கும் தமிழக அரசின் நிதி யிலிருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஒரு சில தவிர்த்து அரசின் நிதி உதவி மிகக்குறை வாகவே உள்ளது. மேலும் ஒரு அரசு கல்லூரி 2எப், 12பி அந்தஸ்து பெற்றுவிட்டால் நேரடி யாக பல்கலைக்கழக நிதி நல்கை குழுவிட மிருந்து யுஜிசி கல்லூரியின் வளர்ச்சி திட்டங் களுக்கு நிதி உதவியை பெற முடியும் பெறு கின்றனர். பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களைப் பொறுத்தவரையில், அந்தந்த பல்க லைக்கழகங்கள் யுஜிசி அமைப்பிடமிருந்து நிதி பெற முடியுமே தவிர, உறுப்புக்கல்லூரி களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை.

ஒரு பக்கம் அரசிடமிருந்து நிதி குறை வாக பெறப்படுகிறது. மறுபுறம் பல்கலைக் கழக நிதி நல்கை குழுவிடமிருந்து நிதி உதவி பெற முடியாத நிலையில் உறுப்புக்கல் லூரிகள் தங்களின் வளர்ச்சிக்கு பல்கலைக் கழக நிதி ஒதுக்கீட்டை மட்டுமே பெருமளவு சார்ந்திருப்பதால், கல்லூரிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

ஆசிரியர்கள் , அலுவலர்கள் ஊதியம் :

பாரதிதாசன் உறுப்புக் கல்லூரிகளில் சில பணியிடங்கள் தவிர்த்து ஏனைய பணியிடங்க ளும், மற்ற பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களின் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பணியிடங்களும் தொகுப்பூதியத்தின் அடிப் படையிலேயே நிரப்பப்படுகின்றன. சில கல் லூரிகளில் தினக்கூலி அடிப்படையிலும் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களில் கவுரவ ஆசிரியருக்கான மாதச்சம் பளம் ரூ.4000 மட்டுமே. தொகுப்பூதிய ஆசிரி யர்களுக்கு ரூ.8000 வழங்கப்படுகிறது. பாரதி தாசன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியரின் தகுதிக்கேற்ப ரூ.8000லிருந்து ரூ.12,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் நிரந்தரப் பணியில் பணியாற்றும் ஆசிரியருக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் என்பது சுமார் ரூ.37,000 ஆகும். மேற்கூறிய அனைத்து வகையான ஆசிரியர் களும் ஒரே மாதிரியான பணியில் ஈடுபட்டா லும் அவர்களுக்கிடையேயான ஊதிய முரண் பாடு என்பது உழைப்புச் சுரண்டலின் கோர முகத்தை காட்டுகிறது.

இலவச மடிக் கணினி (லேப் டாப்) :


சுருக்கமாகச் சொன்னால் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரிகள் என்பது பல் கலைக்கழகங்கள் நடத்தும் சுய நிதிக் கல் லூரிகளே. இக்கல்லூரிகளை அரசு கல்லூரி களாக மாற்ற வேண்டியது ஏழை, எளிய மக்களின் உயர்கல்வியில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களின் கடமையாகும்.

அரசு கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட சலுகைகளான கல்விக்கட்டண ரத்து, இல வச பஸ் பாஸ் வசதி போன்றவை உறுப்புக் கல்லூரிகளுக்கு கிடைக்கப்பெறாமல் இருப் பது போல், அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, செப்டம்பர் 15ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெற இருக்கும் இலவச மடிக் கணினியும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கப்போவ தில்லை.

Read more...

இந்தோனேசிய பாட்மின்டன் காலிறுதியில் செய்னா நேவல்

0 comments

ஜகார்தா, ஜூன் 24-  இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின், ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு, இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்.

ஜகார்தாவில் இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் "நடப்பு சாம்பியன்' இந்தியாவின் செய்னா நேவல், பல்கேரியாவின் பெட்யாவை சந்தித்தார்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செய்னா 21-18, 21-9 என்ற நேர் செட்டில் சுலபமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் டென்மார்க்கின் டினி பானை சந்திக்க உள்ளார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா, அஷ்வினி ஜோடி, இந்தோ னேசியாவின் மெலினா, கிரேசியா ஜோடியிடம் 20-22, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

Read more...
Thursday, 23 June 2011

சமச்சீர் கல்வி சில கேள்விகள்

0 comments

சமச்சீர் கல்வி சில கேள்விகள் 

கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டதைப்போல் இருக்கிறது என்ற பழமொழிக்கான பொருளை இப்போது தெளிவாக உணர முடிகிறது. சமச்சீர் கல்வி தமிழகத்தில் வருமா? வராதா? எந்தப் பாடத்திட்டத்தைப் படிப்பது? 3 வாரகாலத்துக்குக் காத்திருக்கவேண்டிய நிலையில் தமிழக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளனர். சமச்சீர் கல்வி என்ற விவாதம் கடந்த ஐந்தாண்டுகளாகத் தீவிரமாக இருந்தது.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் விவாதத்தை மேலும் நீடிக்கச் செய்வதாக அமைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் பல்வேறு விவாதங்களை, கருத்தறிதல்களை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைத்தவைகளிருந்து ஒரு சிலவற்றைமட்டுமே கடந்த திமுக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் நான்குவாரியங்களைக்
கலைத்து ஒன்றாக இணைக்கும் ஆற்றலை திமுக அரசு கொண்டிருக்கவில்லையென்றும், கல்வியாளர்தரப்பு, திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தது.

மேலும் அதை எதிர்த்துப் பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விமர்சனங்களும், வெறுப்புகளும் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையால், அதிமுக மீது திருப்பிவிடப்பட்டிருக்கிறது என பெற்றோர்கள் பரவலாகப் பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது.
முனைவர் ச. முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று அமலாக்க வேண்டுமென, தமிழகப் பெற்றோர்கள் எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. ஆனால், பாடத்திட்ட அளவில் வந்துவிட்ட அமலாக்கத்தை முழுமையாக நிறுத்திவைத்து, புதிய குழுவை அமைத்து, புதிய வகையில் தரம் உயர்த்தப் போவதாக இப்போதைய மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், சட்டத்திருத்தமும் பெற்றோர்களை 10-ம் வகுப்பு மாணவர்களை, கல்வியாளர்களைச் சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இப்போது உச்ச நீதிமன்றம் 3 வாரகாலத்துக்குப் பள்ளிகள் திறந்து இருக்கலாம்; எந்தப் பாடத்திட்டமும் நடத்தப்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அமலுக்கு வந்துவிட்ட கல்வியாண்டைக் கணக்கில்கொண்டு, மாநில அரசு தரம் உயர்த்துவதற்கான குழுவை மட்டும் நியமித்திருந்தால், கல்வியாளர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால், கடந்த திமுக ஆட்சியின்போது பாடத்திட்டங்களை மட்டும் ஒருங்கிணைத்து ஒன்றாக்குவதை சமச்சீர் கல்வி என்கிற சாதனைப் பட்டியலுக்குள் அடைக்கப்பார்த்தது.

இந்நிலையில் பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்கிற நம்பிக்கையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டனர். உளவியல் ரீதியில் இதுதான் பாடப் புத்தகம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்ட மாணவர்கள், இப்போதைய அரசின் அறிவிப்பால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

கல்வி குறித்த விவாதத்தில், ஐரோப்பிய நாடுகளை விடவும் நாம் பின்தங்கி இருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெரியார், பாரதியார் என பல இந்திய அறிஞர் பெருமக்கள் கல்வி குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் உள்வாங்கியதாக இந்தியக் கல்விமுறை இன்னும் மாற்றம் பெறவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழிக் கல்வி அவசியம் என்கிற சட்டத்தை அறிமுகம் செய்த நேரத்தில், அன்றைய நீதிமன்றம் தலையிட்டு அதற்குத் தடை விதித்தது. அன்றைக்குப் பெற்றோர்களும் ஆங்கில அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்வது, புரிதலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரசாரம் செய்தனர். அன்றைக்கும், இன்றைக்கும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடியவர்கள் தமிழகத் தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஆவர்.

உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் அருகாண்மை பொதுப்பள்ளி முறையை அமலாக்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள பலர் தங்களின் வாதத் தேவைக்காக அமெரிக்காவை முன்னுதாரணம் காட்டுவது உண்டு. அத்தகைய அமெரிக்காவில் அருகாண்மை பொதுப்பள்ளிகள்தான் அமலில் உள்ளன. நம்முடைய தமிழகத்தில் இத்தகைய பள்ளிமுறை வருவதை எதிர்க்கும் நோக்கம் புரியாததாகவே உள்ளது.

குடிக்கும் தண்ணீரைக்கூடப் பணம் கொடுத்து வாங்கும் பண்பாடு வளர்ந்துவிட்ட நம் நாட்டில், கல்வி பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உயர்ந்த தரமான கல்வியென மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்வி பெறுவதை உரிமையாக அளிப்பதற்குப் பதிலாக, வணிகப் பொருளாக ஆட்சியாளர்கள் மாற்றியிருப்பது அவலத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டங்களும், காலவரையற்ற உண்ணாவிரதங்களும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் கல்வி வணிகமாவது ஏன் என்கிற கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்குப் பல லட்சங்களைச் செலவிடும் மாணவரும், பெற்றோரும் அந்தச் செலவினத்தை எதிர்காலத்தில் அடைவதற்காகத் தவறு செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஊழல் எதிர்ப்பில் முன்னின்று கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களே. ஊழலுக்கான ஊற்றுக்கண்ணாக கல்வி வணிகம் அமைந்திருப்பதைக் கணக்கில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.

இன்று தமிழகத்திலும் மத்திய ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு கல்லுரிகளையும், பள்ளிகளையும் நடத்தும் தாளாளர்கள் என்பதை மறுக்க இயலாது. இன்றைக்கு அரசியலுக்கு வருகிற பணத்தில் கணிசமான பங்கு சுயநிதிக் கல்லுரிகளிலும், பள்ளிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கல்வியாளர் முனைவர் ச. அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிற கல்வி வணிகத்தைத் தடுப்பது குறித்து தீவிர கருத்துப் பிரசாரம் அவசியப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கிற சமச்சீர் கல்வி அமலாக்கத்தை வலியுறுத்துவதில் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் உருவான பிறகு, கரன்சி, வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொதுக் கல்விமுறை உருவாக்கத்தையும் அமலாக்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.

அதற்காக 2010-ம் ஆண்டில் 30 லட்சம் மாணவர்களைக் கொண்டு கல்வித்துறையில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் நோக்கம் ஏற்கெனவே பெற்ற வளர்ச்சியை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்வதைத் தவிர வேறில்லை. அதேநேரத்தில் இந்தியா போன்ற நாட்டில் யுனேஸ்கோ குறிப்பிட்ட கருத்தை உள்வாங்கிக் கொள்வது தேவையாகி இருக்கிறது. தரமான கல்வி என்பது குறித்து பல்வேறு வரையறைகள் உள்ளன. வளர்ந்துவரும் நாடுகளில் கல்வியின் தரம், குடும்பத்தின் பங்களிப்பு, வழிகாட்டுதல், உள்ளூர் வளம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற கல்வி, குறிப்பிட்ட பகுதி மக்களின் பண்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவும், அதைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. குழந்தைகளை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. எனவே, இவைகுறித்து தீவிர விவாதங்களிலிருந்து தரமான கல்வியை அடைவதற்கு முயற்சிக்க வேண்டுமென யுனேஸ்கோ ஆய்வு அறிக்கை (2008) தெரிவிக்கிறது.

ஒரு வாதத்துக்காகக் கூறுவது என்றால், அனைத்துவிதமான அரசுகளும் தங்களுக்கு என்று சாதகம் உள்ள அமைப்பு ரீதியாக ஏற்பாடுகளை கொண்டிருக்கத்தான் செய்கின்றன. கல்வித்துறை, பாடத்திட்டம் இதற்கு விதிவிலக்கல்ல என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கத்தைப் பொறுத்தவரையில், அத்தகைய சாதக அம்சங்களை கொண்ட தன்மையில் அமைய வேண்டும் என விருப்பம் கொண்டவர்களாக திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி எழுதிய பாடல் இடம்பெற்றிருப்பதை ஆளும்கட்சி விவாதம் ஆக்கவில்லை என்றாலும், கருணாநிதி வலிய முன்வந்து பாடலை அகற்றக்கோரி இருப்பது ஏற்கமுடியாத அரசியல். இப்போது சொல்வதைக் கடந்த ஆண்டே எடுத்திருந்தால் ஒருவேளை பாராட்டுக்குரியவராக இருந்திருப்பார். இன்னொரு வகையில் பார்க்கிறபோது யார் எழுதியது என்பதைவிட என்ன எழுதப்பட்டது என்ற கோணத்தில் புரிந்துகொள்கிற அரசியல் பண்பாடு தேவையாக இருக்கிறது. இதுபோன்ற பெருந்தன்மைக் குறைவால் தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

3 வார காலம் 1 மற்றும் 6-ம் வகுப்புகளைத் தவிர மற்ற மாணவர்கள் தேவையற்ற காத்திருப்புக்கு ஆளாகியுள்ளனர். பாடப்புத்தங்களைப் பின்பற்றுவது என்பது இயலாத இந்த 15 நாள்களைக் கண்டு பெற்றோரும், மாணவர்களும் அஞ்சத்தேவையில்லை. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் கல்வி முறையும், போதனைமுறையும், அறிவு வளர்ச்சிக்குத் துணைசெய்கிற வகையில் ஏராளமான உதாரணங்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது அவசியம்.

இக்காலத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கல்வித் திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிப்படைக் கணிதம், அறிவியல் துறைகளில் உயர் கல்வி மாணவர்களுக்கும்கூட சில பயிற்சிகளை அளிப்பது குறித்து ஆசிரியர் சமூகம் திட்டமிட வேண்டும். செய்முறைக் கல்வி, கல்விச் சுற்றுலா, நூலகத்தைப் பயன்படுத்துதல், விளையாட்டு மற்றும் எழுத்துத் துறைகளில் மாணவர்களை மேம்படுத்த இக் கால அவகாசம் பயனளிக்கலாம். ஆட்சியாளர்களுக்கு நமது வேண்டுகோள் 3 வாரத்தோடு இந்த ஆண்டுக்கான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே.
 - எஸ். கண்ணன்
 
Read more...

புதுவை பிரதேச பயிற்சி முகாம் :

0 comments
இந்திய மாணவர் சங்கத்தின் புதுவை பிரதேச 
பயிற்சி முகாம் நோட்டீஸ் :
நாள்  :வருகின்ற ஜூலை 2-07-2011 மற்றும் 3-07-௨௦௧௧ தேதிகளில் 
இடம் : மதகடிபட்டில் 

Read more...
Wednesday, 22 June 2011

இது போல் புதுவையில் உள்ள அதிகாரிகள் செய்வார்களா ?

0 comments


எடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்டுகிறோம்

         இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை.    ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.
                அப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய  அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 
                 இப்படிப்பட்ட  சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.
Read more...
Tuesday, 21 June 2011

சமச்சீர் கல்வியை அமுல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் SFI போராட்டம் :

0 comments
தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுக! மாணவர்கள் போர்க்கோலம்
  


சென்னை, ஜூன் 21 -

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு உயர்த்தியுள்ள கட்டண உயர்வை உடன டியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்ட ணமே அதிகமாக உள்ளது. இந்த நிலை யில், கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட் டணத்தை உயர்த்தக்கோரி தனியார் பள் ளிகள் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு, பல பள்ளிகளுக்கு 100 விழுக் காட்டிற்கும் மேல் கட்டணத்தை உயர்த்தி யுள்ளது. இந்த கட்டண உயர்வை உடன டியாக ரத்து செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகளின் நியாயமற்ற கட் டணக் கொள்ளையால் லட்சக்கணக் கான பெற்றோர்கள் சுரண்டப்படுகின்ற னர். பள்ளி நிர்வாகங்கள் சட்டத்தையும், அரசின் விதிமுறைகளையும் மீறி கட்ட ணம் வசூலிப்பதை அரசும், அரசு நிர்வா கமும் வேடிக்கை பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவில், அரசு தரப்பில் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இரண்டு தனியார் பள்ளி முதலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் சென்ற கல்வி வியாபாரிகளை குழுவில் இணைத்துள்ளது எந்த வகை யிலும் ஏற்க முடியாது. ஆகவே, இந்த கல்வி வியாபாரிகளை ஆய்வுக் குழுவில் இருந்து நீக்க வேண்டும்.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தை தேவையான மாற்றங்களோடு நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மாணவர்க ளின் நலன் கருதி முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் . அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள் ளிகள், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி என்பது அரசின் உத்தரவாக இருந் தாலும் கட்டாய நன்கொடை வசூலிக்கப் படுகிறது. கட்டாய நன்கொடை தடைச் சட்டத்தின்படி அப்பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி களில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கடந்தாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, ஆசிரியர் காலிப் பணியிடங் களையும் நிரப்ப வேண்டும் என வலி யுறுத்தி சென்னை பள்ளிக் கல்வி இயக்கு நரகத்தை (டிபிஐ) இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பேரணியாக இயக்குநரகத்திற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் கள், இயக்குநரை சந்தித்து மனுக் கொடுக்க முயற்சித்தனர். அதற்கு போலீசார் அனு மதி மறுத்து விரட்டியடிக்க முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியது. அப்போது போலீசார் லத்தியால் மாணவர்களை தாக்கினர். இரும்பு தடுப்புகளை மாணவர்கள் மீது தள்ளினர். இத்தாக்குதலில் ஆறுமுகம், சதீஷ் ஆகியோருக்கு ரத்த காயம் ஏற்பட் டது. சுமார் 20பேருக்கு உள்காயம் ஏற்பட் டது. இதன்பின்னர் இயக்குநரக வாயிலை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத் தை தொடர்ந்தனர். அதனைத்தொடர்ந்து அனைவரையும் போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜோ. ராஜ்மோகன், வடசென்னை மாவட்ட செய லாளர் எம்.என்.குமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் ரெ.ஸ்டாலின், செயலா ளர் சே.ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப் பினர் ஜான்சி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, செயலாளர் ராஜன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முனிச் செல்வம், செயலாளர் பகத்சிங்தாஸ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணியளவில் விடுதலைசெய்யப்பட்டனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மாநிலம் முழுவதும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமரியில் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல் லூரி மாணவர்கள் 2000க்கும் மேற்பட் டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட் டம் நடத்தினர். இந்து கல்லூரி, ஸ்காட் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி, ஐயப்பன் கல்லூரி, குளித்துறை தேவி மேரி கல்லூரி, மகளிர் கிருத்துவ கல் லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் சரபோஜி கல்லூரி மாண வர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் வகுப்பு களை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ. பழனி, மாவட்ட செயலாளர். வீ. கரிகாலன், மாநிலக்குழு உறுப்பினர் அருளரசன், பாலசுந்தர் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர். தஞ்சை மகளிர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாண விகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட செயலாளர் சிங்கார வேலர் தலைமை வகித்தார். நூற்றுக் கணக்கானோர் பங்கெடுத்தனர். மயிலாடு துறை தியாகி நாராயணசாமி பள்ளி மாணவர்கள் 100 பேர் வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பி முட் லூர் அரசு கலைக் கல்லூரியின் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் தலைமை யில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பாலாாஜி, ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் கே.என்.சி கல்லூரி முன்பு ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் கனிமொழி தலை மை வகித்தார். நாமக்கல், வேலூர் உள் ளிட்டு மாநிலம் முழுவதும் போராட்டங் கள் நடைபெற்றன.
 
Read more...
Monday, 20 June 2011

முதல்வர் ஜெ! பேட்டியில் கேட்க்க படாத கேள்விகள் ?

0 comments
சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவில் -  கல்வி வியாபாரிகள் :


கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர்.

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

இது 2011 மே 24  ஆம் தேதி அம்மையாரிடம் நிருபர்கள் எடுத்த பேட்டியின் பதில்கள். ஆனால் கேள்விகள் எல்லாம் வெளியாகவில்லை.

நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இன்னும் இருக்கிறது .

1 . பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். நீதிபதி  கோவிந்தராஜன் சொன்னது என்னானது?  

2 . இந்த ஆண்டும் நன்கொடை கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாதா? 

3 . சமச்சீர் கல்வி என்ன ஆனது ? 

4 .   பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும்  என்றால் பெற்றோர்கள் கேட்டால் கடந்த ஆட்சியை போல தர்ம அடிதானா? 

5 . தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது சரியான முடிவு .. சபாஷ் .. ஆனால்  

மதுவிலக்கு அமுலாகும் என்றார் தலைவர் அம்மாவும் அமுலாக்குவார்களா?

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, May 24, 2011
Read more...

எடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்டுகிறோம்

0 comments

 இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை.    ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.
                அப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய  அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 
                 இப்படிப்பட்ட  சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும். 
Read more...
Saturday, 18 June 2011

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வுசெய்ய தனியார் பள்ளி முதலாளிகளா?

0 comments
சமச்சீர் கல்வி பாடத் திட்டங்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அமைத் துள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில் தனி யார் பள்ளி முதலாளிகள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி 2010- 2011 ஆம் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ஆம் வகுப் பில் பொதுப்பாடத்திட்டம் மூலம் பாடநூல்கள் நடை முறைப்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 2 முதல் 5 மற்றும் 7முதல் 10 வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டம் பாடநூல் கள் உருவாக்கப்பட்டு மாண வர்கள் படிக்க துவங்கிய நிலையில், தமிழக அரசு பாடத்திட்டம் தரம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை சீர்குலைக்கும் நடவடிக்கை களில் இறங்கியது. அதன்படி நடப்பு கல்வி யாண்டில் சமச்சீர் கல்விக் கான பொதுப்பாடத் திட் டத்தை ரத்து செய்யும் வகை யில் அரசால் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட் டது. இச்சட்டத் திருத்தத் திற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டம், பாட நூல்கள் நடப்பு கல்வியாண் டிலேயே நடைமுறைப் படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த விருப் பமில்லாத அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிறப்பு வழக்காக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல் வியை நடப்பு கல்வி யாண்டே நடைமுறைப்படுத்த வேண் டும். மேலும் மற்ற வகுப்பு களுக்கான பாடத்திட்டம், பாடநூல்களின் தரம் குறித்து 9 பேர் கொண்ட வல்லுனர் குழு மூன்று வாரத்தில் ஆய்வுகள் செய்து உயர்நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவில் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், தேசிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சிலின் பிரதிநிதிகள் இருவர், தமிழக அரசு சார் பில் இருவர், கவ்வியாளர் கள் இருவர், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் அடங்கிய குழுவாக இருக்க வேண்டுமென உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதில் கல்வியாளர்கள் என்ற போர்வையில் டி.ஏ.வி பள்ளிகளின் நிறுவனர் ஜெயதேவ், பத்ம சேஷாத் திரி பள்ளிகளின் உரிமையா ளர் ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகிய தனியார் பள்ளி முத லாளிகளை அரசு நுழைத் துள்ளது. மேற்கண்ட இரு வரும் சென்னையில் பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். சமச் சீர் கல்விக்கான பாடத் திட்டங்களை ஆய்வு செய் யும் இந்தக் குழுவில் இவர் களை எந்த அடிப்படை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி நிறுவனங் களை நடத்தும் இவர்கள், கல்வியாளர்கள் என ஏற் றுக்கொள்ள முடியாது. இதுவரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட எந்த குழு விலும் கல்வியாளர்கள் என்ற வகையில் தனியார் பள்ளி முதலாளிகள் அங்கீ கரிக்கப்பட்டதில்லை.

தனியார்பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்து வரு வதை அனைவரும் அறி வோம். இக்குழு, மாணவர் கள்- பெற்றோர்கள் நலன் கருதி நடுநிலையோடு ஆய்வு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் இல்லை. தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை குழிதோண்டிப் புதைத்திடவே அரசு முடி வெடுத்துள்ளதும் இதிலி ருந்து தெரிய வருகிறது. எனவே, இத்தகைய நடவ டிக்கைக்கு இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
Read more...
Friday, 17 June 2011

ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி :

0 comments
நடுநிலை பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்நிலை பள்ளியில் அனுமதி மறுப்பு - SFI தலையீட்டால்மீண்டும் அனுமதி 

  புதுச்சேரி வில்லியநூரை அடுத்த கீழ்அக்கரகார  அரசு நடுநிலை பள்ளியில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பக்கத்தில் உள்ள உருவையாறு பள்ளியில் 9ம் வகுப்பில் சேறுவதற்காக மாணவர்களின் பெற்றோர்கள்  அப்பள்ளியின்
தலைமை ஆசிரியரை  சந்தித்து அட்மிஷன் செய்து கொள்ளும் படி முறையிட்டுள்ளனர் .    
                
ஆனால் அப்பள்ளியின்  தலைமை ஆசிரியர்   இங்கு போதுமான இடம் இல்லை என்று கூறி கோர்காடு ,மங்களம் ,விவேகானந்தா பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறி அனுபியுள்ளார்.  இதே போல் மற்ற  பள்ளியிலும்  கூலி  வேலை செய்யும் பெற்றோரை அலைக்கடித்து உள்ளனர் .இதன் பிறகு SFI தலையிட்டு பாதிக்கப்பட்ட  மாணவர்களின்       பெற்றோருடன்   கல்வித்துறை    இயக்குனர் திரு.பன்னீர் செல்வத்திடம் கல்வித் துறை வளாகத்தில் புகார் தெரிவித்தவுடன் உடனடியாக  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு   உடனடியாக உருவையாரு பள்ளியில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க  இணை இயக்குனர் திரு .கிருஷ்ணராசுக்கு உத்தரவிட்டார்.
Read more...

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்திடுக:SFI

0 comments
  கடந்த ஆட்சியில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணமாக வசூல் வேட்டை நடத்தப்பட்டது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் இருந்தாலும் அத்தகைய வருமான உச்சவரம்பையும் மீறி, தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 தமிழக அரசைப் பின்பற்றி, புதுச்சேரி தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகத்தினர் புதுச்சேரி அரசுக்கு அளிக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள், பெற்றோர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இத்தகைய போராட்டங்களுக்குக் கடந்த கால ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை. அதனால் இந்த ஆண்டும் கல்விக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. இதனால் அதிக கட்டணம் செலுத்த இயலாதவர்கள் வேறு பள்ளிகளுக்கு பிள்ளைகளை மாற்றிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை அலைக்கழிக்கின்றன.

 எனவே புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ரங்கசாமி தனியார் பள்ளி நிர்வாகத்தினரை அழைத்துப் பேசி புதுச்சேரியில் கல்விக் கட்டணத்தை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read more...
Thursday, 16 June 2011

பெண்களுக்கு எதிரான கொடுமைகள்: இந்தியாவுக்கு 4வது இடம்

0 comments



உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத வரி சையில் இந்தியா நான்கா வது இடத்தை வகிக்கிறது. பெண் சிசுக் கொலை, குழந் தைகள் கடத்தல் ஆகியவை இந்தியாவில் அதிகம் நிகழ் வதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் இயங்கி வரும் டிரஸ்ட்லா என்ற நிறுவனம் உலக அளவில் பெண்கள் நிலைமை குறித்து ஆய்வு நடத்தியது. இதில் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நாடுகள் வரிசையில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண் டாவது இடத்தில் காங்கோ வும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள் ளன என்று தெரியவந்துள் ளது. ஐந்தாவது இடத்தில் சோமாலியா உள்ளது.

பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாக உள்ளன. பாலி யல் கொடுமைகள், சுகா தாரச் சீர்கேடு, பாலின பாகு பாடு, பண்பாட்டு ரீதியி லான சித்ரவதைகள், மூட நம்பிக்கை அடிப்படையி லான கொடுமைகள், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் அதி கம் நடைபெறுகின்றன என்று அந்த ஆய்வு கூறு கிறது.

இந்தியாவை பொறுத் தவரை பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் கடத் தல் ஆகியவை அதிகம் நடைபெறுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு கோடி குழந்தைகள் கடத் தப்பட்டதாக மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவிற்குள்ளும், 10 சதவீதம் வெளிநாட்டிற்கும் கடத்தப்பட்டதாகும். இந்தி யாவில் 30 லட்சம் பெண் குழந்தைகள் கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடு படுத்தப்படுவதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் குறைவான வர்கள் என்றும் மத்திய புல னாய்வுத்துறை தெரிவித் துள்ளது.

பெண்களை இளம் வய திலேயே கட்டாயப்படுத்தி மணம் செய்து வைப்பது, கவுரவக் கொலைகள் ஆகிய வையும் பெண்களுக்கு எதி ரான கொடுமைகளாக நிகழ் கின்றன. பாலின சமத்துவ மின்மையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் - பெண் வகிதம் 1000: 914 என்ற விகிதத் திலேயே உள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Read more...

What do you Think about this?

0 comments

Chief Minister directs officials to shift foodgrains in schools



Hyderabad, Jun 14 :Andhra Pradesh Chief Minister N Kiran Kumar Reddy directed the Civil Supplies Department to shift the foodgrains stored in schools at various places in the State immediately as they re-opened after summer vacation. 

The Chief Minister was informed by the oficials that Indira Kranthi Patham (IKP), through Civil Supplies Department, so far procured a record 19 lakh Metric tonnes of foodgrains from the farmers.


For the first time in the country, such a record procurement was achieved by the IKP groups.

The Chief Minister directed the officials at a meeting that arrears towards the payment for procurement from the farmers should be released within three or four days, according to an official release here.


He also directed top officials, District Collectors and Officials of the Civil Supplies Department that foodgrains stored temporarily at government school buildings should be immediately shifted. 
--UNI 
Please post your comments...................


Read more...

கல்வி நமது அடிப்படை உரிமை : பாதுகாப்போம்

0 comments
கல்வி பெறும் உரிமை... ஒரு தொடரும் கனவு
-கிருஷ்ணக் குமார்
கல்வி பெறும் உரிமைச் சட்டம் இயற்றப் பட்டு ஓராண்டு காலம் முடிந்துவிட்டது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றபடி கல்வியறிவு பெறுவதற்காகக் காத் திருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குழந் தைகளும் ஓராண்டைக் கடந்துள்ளனர். குழந் தைகள் சத்துணவின்றி புறக்கணிக்கப்படு வது போல் இச்சட்டமும் புறக்கணிக்கப்பட் டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் நாள் முதல் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கொடுப்பது என்ற கனவு நிறைவேறாத தாகவே உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கால வரையரையுடன் வந்துள்ள இச்சட்டம், அதன் தொடக்க நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில்தான் ஓராண்டுக்குப் பின்ன ரும் உள்ளது. சட்டத்தின் ஒரு முக்கியமான பிரிவினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட் டத்தின் பிற பகுதிகளை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு தடையேதும் இல்லை. இருப்பினும் மாநில அரசுகளின் கவனம் இதன்பால் முழுவதுமாகத் திரும்பவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து பேசும் போது, இந்தியக் கூட்டாட்சியில் கல்வி, மாநிலங்களின் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, ஆரம்பக்கல்வி குறித்து தலையிடு வதில் மிகச்சிறிய பங்கே உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு, மாநில அரசு களை இச்சட்டத்தினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் பொறுப்பை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இம் முயற்சியில் மிகச் சிறிய வெற்றியே பெற்றுள் ளது. ஏன்?

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக் கிய அம்சம், தரமான கல்வி பெறுவதை அனைத்துக் குழந்தைகளின் உரிமையாகப் பார்க்கிறது. சட்டத்தின் ஐந்தாம் பிரிவு, தரமான ஆரம்பக்கல்வியை அடைவதற்கான அடிப்ப டைத் தேவைகளைப் பட்டியலிடுகிறது. இதில் கற்றலுக்கு உகந்த ஆசிரியர்-மாணவர் விகி தாச்சாரம், பாடத்திட்ட சீர்திருத்தம், மதிப் பிட்டு முறையில் மாற்றம் ஆகியன அடங்கும். இவைகளின் வெற்றி ஆசிரியர்களின் முயற்சி யில்தான் உள்ளது. இதுவே இன்றைய மிகப் பெரிய சவாலாகும்.

குழந்தைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதே இன்றைய உடனடித் தேவை யாகும். தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்விக் குழு(சூஊகூநு) நிறுவப்பட்ட போது, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை உரிய முறையில் ஆய்வு நடத்தி உரிமங்களை வழங்கிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இக்குழு அதன் வேலையைச் சரியாகச் செய்யாததால் பிரச் சனை முற்றிப் போய் உள்ளது. ஆயிரக்கணக் கில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எவ்விதத் தரமும் நேர்மையுமின்றி வெறும் லாப நோக்குடன் செயல்பட்டு வருகின்றன.

கல்வி பெறும் உரிமைச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும் கல்வித் திட்டம், ஆசிரியர் பயிற்சி, மாணவர் மதிப்பீடு இவற்றை நிர்ணயிக்கவும் மேம்படுத்தவும் ஒரு கல்வி ஆணையத்தை உருவாக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங் கள் இத்தகு ஆணையத்தை உருவாக்கவில் லை என்பது கசப்பான உண்மையாகும். பெரும்பான்மை மாநிலங்கள் அவைகளின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனங்களையே (ளுஊநுசுகூ) இதற்கான ஏற்பா டாக அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அவைகளின் நடுநிலைப் பள்ளிக் கல்வி நிறு வனத்திடமே (க்ஷடியசன டிக ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) இப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கென்று தனி ஆணையம் ஏதும் இம்மாநிலங்களில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் அவை களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு பணி களுடன் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தையும் கண்காணிக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவி லேயே கேரளாவில் மட்டுமே மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. கார ணம் இந்நிறுவனத்திற்குத் தேவையான அந் தஸ்தையும் மரியாதையையும் இடது ஜனநா யக முன்னணி அரசு அளித்துள்ளது. கேரளா வில் புதியதாகப் பதவி ஏற்றிருக்கும் அரசு இத னை சீர்குலைத்துவிடாது என்று நம்புவோம். பிற மாநிலங்களும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரத்தையும் அந்தஸ்தையும் வழங்கி அவைகளைப் பலப்படுத்திட வேண்டும். கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை அமல் படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் , ஊக்கத்தையும் இங்கிருந்து பெறும் வகையில் இந்நிறுவனங்களை வளர்த்திட வேண்டும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் ஆசிரியர்களுக்கும், அதிகாரி களுக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள் ளன. குழந்தைகளை ஏதேனும் ஒரு கட்டத் தில் பெயிலாக்கி வெளியே அனுப்பும் பழக்கத் தில் ஊறிப் போனதிலிருந்து விடுபடுவதற்கு ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்கிறது. அதே போல் குழந்தையை மையப்படுத்திய கற்பித் தல் முறையையும், தேர்வுகளைத் தவிர்த்து விட்டு மாணவர்களைத் தொடர் மதிப்பீடு செய்யும் முறையையும் முற்றிலும் வித்தியாச மாக உணருகிறார்கள். குழந்தைகளை அடிப் பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஆசிரியர் களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. குழந் தைகளை அச்சுறுத்தியே படிக்க வைக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு எத்தகு கல்வி கொடுப்பது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். கற்றல், கற்பித்தல் எதுவும் நடக்காமல் இவைகள் குழந்தைகளை பராமரிப்பு மையங்களாகவே செயல்படுகின்றன. இம்மையங்களில் பணி யாற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படாமையால் எதையும் கற்றுக் கொடுக்காமல் பகல் முழுவதும் குழந்தை களைப் பராமரிக்கும் ஆயாக்களாகவே செயல் படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு வரு வார்கள், இலவச மதிய உணவு உண்பார்கள், சென்றுவிடுவார்கள் என்பதே வழக்கமாகியுள் ளது. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பது குறித்த அக்கறை யாரிடமும் இல் லை. இதனாலேயே ஏழைப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அவர்கள் வாழும் இடத்துக்கு அருகில் அல்லது சிறிது தூரத் தில் இருக்கும் தனியார் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகள் குழந் தைகளை அடித்து உதைத்து பாடங்களைத் திணித்து தேர்வுகளுக்குத் தயார் செய்கின் றன. தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல் லாமையால் ஏராளமான பாலர் பள்ளிகளில் குழந் தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனர்.

கல்வி பெறும் உரிமைச் சட்டம் வெற்றி யடைந்திட வருகின்ற நான்காண்டு காலத் திற்குள் பத்து லட்சம் ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த பத்து லட்சம் ஆசிரியர் களுக்கு யார் பயிற்சி கொடுப்பது? குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள்? தேசிய அளவிலான இந்தச் சவாலைச் சமாளிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பல்கலைக்கழகங்களில் இதற்கான சலனங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற் றத்தை அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட் டுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கூட ஆசிரியர் பயிற்சியை புறந்தள்ளியுள்ளன. எனவே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாக அஞ்சல் வழிக் கல்வி ஒன்றே தென்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்கிடுவதற்கான ஏற்பாடு கள், செலவுகள் குறித்த விவாதங்கள் எந்த மட்டத்திலும் இன்னும் நடைபெறவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவை எதிர்த்து மேட்டுக்குடி மக்களுக் கான பள்ளிகளின் நிர்வாகிகள் உச்ச நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப் பள்ளி கள் மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சத வீதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக் கிட வேண்டும். தங்கள் பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்குச் சமமாக எப்படி ஏழைக்குழந்தைகளை உட்கார வைக்க முடியும்? இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது? 25 சதவீத இட ஒதுக்கீட்டினால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு கட்டப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. அரசு குறிப்பிடும் இத்தொகை போது மானதாக இருக்காது என்றும் இப்பள்ளி நிர் வாகிகள் கருதுகின்றனர்.

இவ்வழக்கில் அரசு வெற்றி பெற்றால் மேட்டுக்குடிப் பள்ளிகளின் மேட்டுமைத் தனத்தை சிறிது அசைக்க முடியும். இதைத் தாண்டி இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இவ்விரு வர்க்கப் பிரிவினரையும் சேர்த்து வைத்துப் பாடம் நடத்திட தனி பயிற்சி அளித்திட வேண்டும். கொல்கத்தா நகரில் உள்ள “தி லொரோட்டோ” பள்ளி நிர்வாகம் இதில் பெரும் வெற்றிபெற்று உள்ளது. இப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி சிரில், தன்னுடைய பள்ளியில் வர்க்க பேதங்கள் இல்லாமல் குழந்தைகள் ஒன்றாகப் பழகி பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்று கூறுகின்றார். வர்க்க பேதங்கள் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி யின் அனுபவத்தை மற்ற பணக்கார பள்ளிகள் கற்றுக் கொள்ள வேண்டும். பணக்கார குழந் தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் போது இரு பிரிவினரும் பயன் அடைவர் என்பதே உண்மையாகும். இவ்வுண்மையைப் பணக்கார பெற்றோரும் பள்ளி நிர்வாகிகளும் உணர்ந்திட வேண்டும்.

கட்டுரையாளர்,

முன்னாள் டைரக்டர் என்சிஇஆர்டி

தமிழில் : பேரா.பெ.விஜயகுமார்

Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com