Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 23 August 2014

No Permanent Building for College in CM Constituency - SFI Strike...!

0 comments
 No permanent Building for Govt Arts College in CM Constituency - SFI Strike on 22/08/2014...!

Sfi Puducherry Indira Gandhi Arts and Science College Unit staged a protest demanding permanent building for college, to fulfill basic facilities. Morethan 500 students boycotted the class, gathered in front of the college and raising slogans against the Higher Education Department and the Ruling party. Sfi Puducherry State Secretary Com. A Anand, Joint Secretary Jeeva Ranjith greets the struggle.

முதலமைச்சர் தொகுதியில் 12 வருடமாக அரசு கல்லூரிக்கு சொந்த கட்டிடம் இல்லை -  இந்திய மாணவர் சங்கம் போராட்டம்...!

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளி கட்டிடத்தில் இயங்கிவருகிறது. இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசின் சார்பாக 2005ம் ஆண்டு கல்லூரி அருகே 6-1/2 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட்டதோடு எந்த பணிகளும் துவங்கப்படவில்லை. தற்போது கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இடநெருக்கடி அதிகமாகவே கல்லூரி நடைபெறும் ஒருபகுதியில் பள்ளிக்கென கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிவழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்கால் காரணமாக ஏற்படும் துர்நாற்றத்தால் வகுப்பறைக்குள் நாற்றம் வீசுவதால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது. இதனால் வெயில் காலங்களில் மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். கொழிபன்னைகள் போல் ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ் வகுப்பறைகள் இயங்குவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கண் எரிச்சல், தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டில் இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை துவங்கவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்  என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் ஜீவா ரஞ்சித் கண்டன உரையாற்றினர். மேலும் கதிர்காமம் கலை அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளை துவங்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் - புதுச்சேரி அரசுக்கும், உயர்கல்விதுறைக்கும் தெரிவித்துகொள்கிறது.
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com